உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -11

பொன்னன் சாமன் வளர்பிறைபோல வளர்ந்து பதினாறு வயதுள்ள இளைஞன் ஆனான். அவனைக் குடிலில் விட்டுவிட்டு, பெற்றோர் காட்டில் சென்று காய்கனிகளையும் கிழங்குகளையும் கொண்டு வருவார்கள். அவ்வாறு, வழக்கம் போல ஒருநாள் அவர்கள் காட்டுக்குப்போய் காய்கனிகளைப் பறித்துக் கொண்டு மாலை நேரத்தில் தமது இருப்பிடம் திரும்பி வந்தனர். குடிலுக்கு அரு அருகே வந்தபோது வானத்திலே மேகங்கள் சூழ்ந்து கொண்டு மழை பெய்தன. அவர்கள் ஒரு பெரிய மரத்தினடியில் மழைக்கு ஒதுங்கினார்கள். மரத் தினடியில் இருந்த பாம்புப் புற்றின்மேல் நின்றார்கள். மழை நீர். அவர்களின் உடம்பை நனைத்து வியர்வையுடன் கலந்து புற்றினுள் ஒழுகிற்று. புற்றுக்குள் இருந்த பாம்பின் மூக்கிலே வியர்வை நாற்றம் புகுந்தது. வியர்வை நாற்றத்தினால் சினங்கொண்ட பாம்பு சீறிப் பெரு மூச்சு விட்டது. பாம்பின் நச்சுக் காற்று இவர்கள்மேலே பட்டது. அப்போது இவர்களுக்குக் கண்பார்வை மறைந்துவிட்டது. ஒருவரை யொருவர் பார்க்க முடியவில்லை. துகூலிகர் பாரிகையிடம், “எனக்குப் பார்வை தெரியவில்லை. உன்னை நான் காணமுடியவில்லை” என்று கூறினார். பாரிகையும் அவரிடம் அவ்வாறே சொன்னார்:“இனி நமக்கு வாழ்க்கை இல்லை” என்று அவர்கள் கூறிப் புலம்பிக் கொண்டே வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி நடந்தார்கள். முற் பிறப்பில் என்ன பாவம் செய்தோமோ என்று அவர்கள் ஏங்கி னார்கள்.

இவர்கள் முற்பிறப்பிலே மருத்துவர் குடும்பத்திலே பிறந்து பிணியாளர்க்கு மருந்து கொடுக்கும் தொழிலைச் செய்து வந்தார்கள். ஒரு சீமானுடைய கண்ணில் நோய் உண்டாக, அவர் இவரிடம் வந்து மருந்து போட்டுக்கொண்டார். ஆனால், நோய் நீங்கியபிறகு சீமான் இவருக்குக் காசு கொடுக்கவில்லை. மருத்துவர் தன் மனைவியிடம் தெரிவித்து இதற்கு என்ன செய்வது என்று கேட்டார். மனைவி, சீமான் மேல் சினங்கொண்டு, “அவனிடம் காசு கேட்கவேண்டாம். மருந்து கொண்டு போய் அவன் கண்ணில் விட்டு ஒரு கண்ணைக் குருடாக்கிவிடு” என்று கூறினாள். அந்த யோசனையை வைத்தியர் ஏற்றுக்கொண்டு அவ்வாறே செய்தார். பிரபுவுக்கு ஒரு கண் குருடாகிவிட்டது. இந்தப் பாவத்தின் பலனாக இவர்களுக்கு இந்தப் பிறப்பிலே இரண்டு கண்களும் குருடாயின.

குடிலில் தங்கியிருந்த போதிசத்துவரான பொன்னன் சாமன் தமக்குள் எண்ணினார்: “வழக்கமாக நமது பெற்றோர் இந்த நேரத்திற்குள் வந்து