உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

தாங்கள் எங்களுக்குப் பணிவிடை செய்வது முறையன்று. நாங்கள் தங்களுடைய குடிமக்கள்; தங்களைப் பணிந்து வணங்குகிறோம்."

இதைக்கேட்டு அரசன் தனக்குள் எண்ணினான்: 'இது வியப்பாக இருக்கிறது. இவர்கள் என்னைச் சபிக்கவில்லை, சுடுசொல் கூற வில்லை. கடுஞ்சொல் சொல்லி என் மனத்தைச் சுடவில்லை. இவர் களுடைய அருமை மகனைக் கொன்று பெரும் பாவம் செய்த குற்ற வாளியாகிய என்னை இவர்கள் அன்புடன் வரவேற்கிறார்கள்' என்று அரசன் எண்ணினான். பிறகு அவர்களிடம் இவ்வாறு கூறினான்: “ஐயா! தாங்களே என் தந்தை. அம்மா! தாங்கள் என் அன்னை.

وو

அவர்கள் அரசனை வணங்கிக் கூறினார்கன்: “எங்களைச் சாமன் இருக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போய் விடுங்கள். இந்த மூங்கில் கோலின் ஒரு முனையை நாங்கள் பிடித்துக் கொள்ளுகிறோம். மற்ற முனையைத் தாங்கள் பிடித்துக்கொண்டு எங்களுக்கு வழிகாட்டியருளுங்கள்” என்று வேண்டினர்.

இதற்குள் பொழுது போய்விட்டது; சூரியன் மறைந்து விட்ட து. அரசன் தனக்குள் எண்ணினான்: 'இவர்களைச் சாமன் இருக்கு மிடத்தில் அழைத்துக்கொண்டு போனால் துக்கத்தினால் இவர் களுடைய இருதயம் வெடித்துவிடும். இவர்களின் உயிர் போய்விடும். மூன்று பேரைக்கொன்ற பாவத்திற்கு நான் ஆளாவேன். என்னைப் பாவம் சூழ்ந்துகொண்டு நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். ஆகையால் இவர்களை அங்கு அழைத்துக் கொண்டு போவது சரியல்ல.' இவ்வாறு தனக்குள் நினைத்து, அரசன் கூறினான்: “சாமன் கிடக்கும் இடம் ஆபத்தானது. கொடிய காட்டு மிருகங்கள் அங்கேயிருக்கின்றன. இப்போது இரவு நேரத்தில் அங்குச் செல்வது கூடாது.

“எத்தனை கொடிய மிருகங்களுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். அவை எங்களை ஒன்றும் செய்யா. எங்களை அங்கே அழைத்துக் கொண்டு போய்விடுங்கள்” என்று கூறி அவர்கள் வற்புறுத்தினார்கள்.

அரசன் தடுக்க முடியாமல் அவர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்துக்குப்போய், “இதோ உங்கள் மகன்” என்று காட்டினான்.

தாயும் தந்தையும் மகனுடைய உடம்பின்மேல் விழுந்து அழுதார்கள். அவனுடைய முகத்தையும் தலையையும் உடம்பையும் கைகால்களையும் தொட்டுப் பார்த்துக் கதறினார்கள். சந்திரன் போன்று