உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

ஒருவகைத் தைலத்தைப் பூசிக்கொண்டு, வயிறு நிறைய உணவு அருந்தி, எண்ணெய் தோய்க்கப்பட்ட சட்டைகளை உடம்பில் இறுக்கமாக அணிந்து பாய்மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

கப்பல் நீரில் முழுகிப் பாய்மரம் மட்டும் நீருக்குமேல் நின்றது. அப்போது சுறா முதலிய கொடிய மீன்கள் கப்பலைச் சூழ்ந்துகொண்டன. அவை கப்பலில் இருந்தவர்களின் கால்களையும் கைகளையும் கடித்துத் துண்டித்தன. அதனால், கப்பலைச் சூழ்ந்து கடல்நீர் இரத்தக் கறையாக இருந்தது. போதிசத்து வராகிய மகா ஜனகன், பாய்மரத்தின் உச்சியில் ஏறிநின்று, கப்பலைச் சூழ்ந்துகொண்டிருந்த மீன்களுக்கு அகப் படாமல், நூற்று நாற்பது முழந்தூரத்துக்கப்பால் நீரில் குதித்தார். குதித்து விரைவாக நீந்தி அப்பால் சென்றார். நீந்திச்செல்லும்போது ஒரு மரக் கட்டை அங்கு மிதந்து கொண்டிருந்தது. மகா ஜனகன் அக் கட்டையைப் புணையாகக்கொண்டு கடலை நீந்தினார்.

அப்போது மிதிலை நாட்டு மன்னனான, நோயாய்க் கிடந்த பொல ஜனகன் இறந்து போனான். மகா ஜனகன் மரக்கட்டை யின் உதவி கொண்டு கடல் ஏழு நாட்கள் வரையில் நீந்தினார். ஏழாம்நாள் வெகு தூரத்துக்கப்பால் கரை காணப்பட்டது.

தெய்வமகளான மணிமேகலை என்னும் தெய்வம் கடல் களின் காவல் தெய்வமாக ஏற்படுத்தப்பட்டிருந்தாள். சதுர்மகா ராஜிகர் என்னும் திக்குப்பாலகர்கள் மணிமேகலையைக் கடற் காவல் தெய்வமாக ஏற்படுத்தினார்கள். அறவழியில் நடக்கும் நல்லவர்கள் யாரேனும் கடல் ஆபத்துக்குட்பட்டால், அவர்களைத் துன்பத்திருந்து காப்பாற்றவேண்டுவது அவளது கடமை என்று கட்டளையிட்டார்கள். அதுமுதல் மணிமேகலை, கடல் அல்லலுறும் நல்லவர்களைக் காப்பாற்றி வந்தது. அந்த தெய்வம், தேவலோகத்துக்குப்போய் தேவ சபையிலே இருந்தபடியால் ஏழு நாட்களாகக் கடல்களைப் பார்க்க வில்லை. ஏழாம்நாள் மணிமேகலை, தனக்குத்தானே, 'ஏழு நாளாக நான் கடலைப் பார்க்கவில்லை. யாரேனும் கடல் அகப்பட்டுத் துன்புறுகிறார் களா என்று பார்ப்போம்' என்று சொல்லிக்கொண்டு கடற்பரப்பை நோக்கிற்று. அப்போது போதிசத்துவர் கடல் துன்புற்று நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர் அருகில் சென்று ஆகாயத்தில் நின்று, “நீ யார்? நடுக் கடலிலே இப்பெருங்கடலைக் கையினால் நீந்திக்கொண்டிருக்கிறீர். இந்த ஆபத்திலிருந்து உம்மைக் கரையேற்றுபவர் யார்?".. என்று கேட்டது.

0