உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

"நான் வந்தபோது சீவாலிகுமாரி தனது கையினால் எனக்குக் கைலாகு கொடுத்ததிலிருந்தே, நான் அவரை மகிழ்வித்தேன் என்பது வெளிப் படுகிறது. காலஞ்சென்ற அரசர் பெருமான் வேறு ஏதேனும் சொன்னாரோ?”

அது

66

9966

"சதுரக் கட்டிலின் தலைப்பக்கத்தைக் கண்டுபிடிப்பவருக்கு அரசாட்சியைக் கொடுக்கும்படி சொன்னார்.” “இதைக் கண்டு பிடிப்பது கடினந்தான். ஆனால் 'உபாயத்தினால் கண்டுபிடிக்கலாம்' என்று தமக்குள் எண்ணிக்கொண்டு அரசன் தமது தலையிருந்து கொண்டை ஊசியை எடுத்து அரச குமாரியிடங் கொடுத்து இதை இதன் இடத்தில் வை என்று கூறினார். அரச குமாரி அதை வாங்கிக் கட்டிலின் தலைப் புறத்தில் வைத்தாள். இந்தக் குறிப்பைக் கொண்டு, கட்டிலின் தலைப்புறம் இது என்று அமைச்சர்களுக்கு காட்டினார். அவர்கள் வியப்படைந்தார்கள். “இன்னும் ஏதேனும் அரசர் பெருமான் சொன்னாரோ?” என்று கேட்டார் மகாஜனக அரசன். “ஆம், அரசே!” “என்று ஆயிரம் ஆள் பலமுள்ள வில்லை வளைத்து நாணேற்றவேண்டும். அந்த வில்லைக் கொண்டுவரச் சொல்லி, கட்டிலில் அமர்ந்த வண்ணமே, வெகு எளிதில் வில்லை வளைத்து நாணேற்றினார். இன்னும் ஏதேனும் செய்யவேண்டியது உண்டோ 6 என்று அமைச்சர்களை அரசன் வினாவினார். பதினாறு இடங்களில் உள்ள செல்வப் புதையல்களை எடுப்பவருக்கு அரசாட்சியைத் தரும்படி அரசர் பெருமான் கூறினார் என்றார்கள். அந்தச் செல்வப் புதையல்களின் பெயரைச் சொல்லச் சொன்னபோது அவர்கள், தோன்றும் பகலவன், மறையும் பகலவன் முதய இடங்களில் உள்ள செல்வப் புதையல்களின் பட்டியலைக் கூறினார்கள். இதைக் கேட்டபோது, மகா ஜனகமன்னனுக்கு அவற்றின் உட்பொருள், வானத்தில் வெண்ணிலாவைப் போல விளக்கமாகத் தெரிந்தது. இன்றைக்கு நேரம் இல்லை. நாளைக்குப் புதையல்களைத் தோண்டி எடுக்கலாம் என்று சொல்லி அமைச்சர்களை அனுப்பிவிட்டார்.

6

அடுத்த நாள் அமைச்சர்களை அழைத்து, காலஞ்சென்ற அரசர் பெருமான், பிரத்தியேக புத்தர்களுக்கு உணவு அளிப்பது வழக்கம் உண்டா என்று வினவினார். ஆம் என்று விடை கூறினார்கள். பகலவன் அல்லது சூரியன் என்பது பிரத்தியேக புத்தர்களுக்குப் பெயர்.

கையினாலே தோன்றும் பகலவன் என்றால், பிரத்தியேக புத்தர்