உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

73

இவர், காத தூரம் சென்று ஒரு நல்ல இடத்தில் குடிசை அமைத்து அதில் இவர் தமது தங்கையுடன் துறவியாகத் தங்கி யிருந்தார். இவர் துறவு பூண்டு வந்தபிறகு மற்றவர்களும், கிராமங்களிருந்தும், நகரத் திருந்தும் வந்து துறவு பூண்டு இவருடன் தங்கினார்கள். இவ்வாறு துறவிகளின் கூட்டம் பெருகியது. மதிப்பும் மேன்மையும் உண்டாயிற்று. அப்போது போதி சத்துவர் தமக்குள் எண்ணினார்: 'இங்கே மதிப்பும் மேன்மையும் கிடைக்கின்றன. நிறைய உணவும் கிடைக்கின்றது. நம்மைச் சுற்றிலும் பெருங்கூட்டம் சூழ்ந்திருக்கிறது. பெருமையும் முதன்மையும் தரப் படுகிறது. இவையெல்லாம் எனக்கு ஏன்? தன்னந்தனியே இருக்க விரும்புகிறேன். 'இவ்வாறு எண்ணிய இவர் ஒருநாள் யாரும் அறியாமல், தங்கைக்கும் சொல்லாமல் தனியே புறப்பட்டுப் போய் விட்டார். போனவர் நெடுந்தூரம் கடந்து கடைசியாக தமிள இராச்சியத்திலே' கவீர பட்டணத்துக்கு அருகிலே ஒரு சோலையிலே வந்து தங்கினார்.

தங்கி, யோகத்தில் அமர்ந்து ஆனந்த மோன நிலையையும் தெய்வீகமான சக்தியையும் பெற்றார். இவ்விடத்திலேயும் மக்கள் கூட்டம் திரளாக வந்து, அவரைப் போற்றி வணங்கியும், அவருக்கு உணவு கொடுத்தும் வழிபட்டனர். இவற்றை இவர் விரும்பாமல், தன்னந் தனியே இருக்க எண்ணி, வானத்தில் எழுந்து நாகத்தீவுக்கு2 அருகில் உள்ள 3காரைத்தீவுக்குச் சென்றார்.

அக்காலத்திலே காரைத் தீவுக்கு அஹிதீபம் அதாவது பாம்புத் தீவு என்று பெயர். அங்கே ஒரு காரை மரத்தின் அடி யிலே ஒரு குடிசை அமைத்து அதில் போதிசத்துவர் தங்கியிருந் தார். இவர் இங்குத் தங்கியிருப்பதை ஒருவரும் அறியவில்லை.

இவருடைய தங்கையார் தமயனைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்து கடைசியில் தமிள இராச்சியத்திற்கு வந்தார். வந்தும் தமய னாரைக் காணவில்லை. இவர் தங்கியிருந்த அதே இடத்தில் தங்கினார். னால், அவர் மோன நிலையையடைந்தும் தெய்வீக சக்தியைப் பெற வில்லை. காரைத்தீவில் தங்கிய போதிசத்துவர் வேறு எங்கேயும் போகாமல் அவ்விடத்திலேயே தங்கி, காரைப்பழம் பழுக்கிற காலத்தில் அப்பழத்தை உணவாகக் கொண்டும், அம்மரம் தழைக்கின்ற காலத்தில் தழையை நீரில் வேகவைத்து உட்கொண்டும் காலங்கழித்தார்.இவ்வாறு இவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, இவருடைய தவத்தின் பெரு