உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

/87

முறையல்ல' என்று தமக்குள் சிந்தித்தார். பிறகு, அவர் சில மருந்து களுடன் மூலிகைகளைச் சேர்த்து அதனுடன் நீலத் தாமரையின் சாற்றைப் பிழிந்து அரைத்துக் குழைத்து அந்த மருந்துக் குழம்பைத் துகிலி கையினால் எடுத்து அரசருடைய வலது கண்ணைச் சுற்றிலும் பூசினார். அப்போது அரசருக்குக் கண்ணில் எரிச்சல் உண்டாயிற்று. விழி சுழன்றது.

“பெருமான் அடிகளே! சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினார்

மருத்துவர்.

66

ஒன்றும் பேசாதே. கண்ணை வெளியே எடு. தாமதம் செய்யாதே”என்றார் அரசர்.

மருத்துவர், அந்த மருந்தையே மீண்டும் கண்ணைச் சுற்றிலும் பூசினார் அப்போது, முன்னைவிட வயும் எரிச்சலும் அதிக மாயிற்று. விழி பிதுங்கி வெளியே வந்தது.

66

'அரசே! இப்போதுங்கூட கண்ணைச் சரிப்படுத்திவிட முடியும். சிந்தித்துப் பாருங்கள்” என்றார் மருத்துவர்

66

“சிந்திக்க வேண்டியது ஒன்றும் இல்லை, விரைவாக ஆகட்டும்.’

மருத்துவர் வேறு மருந்தைக் குழைத்து அதைத் துகிலிகை யினால் எடுத்துக் கண்ணில் பூசினார். அப்போது, பிதுங்கி வெளிப்பட்டிருந்த கண் விழி, கண் குழியை விட்டு வெளியே விழுந்து நாளத்தில் ஒட்டிக் கொண்டு தொங்கிற்று. "வேந்தே! இப்போதுங்கூட கண்ணைச் செம்மைப்படுத்த முடியும். கட்டளை யிடுங்கள், விழியை முன் போலவே கண்ணில் வைத்துவிடுகிறேன்” என்று வேண்டினார் சீவகர்.

“வேண்டாம், விரைவாக வெளியே எடு” என்றார் அரசர்.

அப்போது அரசருடைய கண்ணில் வலியும் நோவும் எரிச்சலும் அதிகமாயிற்று. இரத்தம் ஒழுகி ஆடையில் நனைந்து கறையாயிற்று. அரசியும் சுற்றத்தாரும் அரசர் கால் வீழ்ந்து அழுதார்கள், “வேண்டாம், கண்ணை எடுக்க வேண்டாம்” என்று கெஞ்சி வேண்டினார்கள்.

அரசர், கடுமையான வலியைப் பொறுத்துக்கொண்டு, “சீவகரே! ஆகட்டும், விழியை எடும்” என்று கூறினார்.

சீவகன் ஒன்றும் பேசாமல் பந்துபோலத் தொங்குகிற விழி யைத் தனது இடது கையினால் தாங்கிக்கொண்டு, வலது கை யினாலே சிறிய கூர்மையான கத்தியினால் நாளத்தை அறுத்தார். பிறகு விழியை அரசர்