உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

89

ஆளையும் அமைத்தார்கள். பிறகு, எல்லோரும் அரசரிடம் விடை பெற்று நகரத்திற்குப் போய் விட்டார்கள். தவம் செய்வதற்கு ஏற்ற, அந்த அமைதியான ஏரிக் கரையிலே அரசர் அமர்ந்திருந்தார்.

அப்போது, தேவகேத்தில் இருந்த சக்கனுடைய சிம்மா சனம் சூடுகொண்டது. சக்கன் அதன் காரணத்தை அறிந்தான். 'நான் போய்க் காட்டில் தவம் செய்கிற சிவி அரசருக்கு வரம் தந்து அவருக்குப் பார்வையையளிப்பேன்' என்று நினைத்துச் சக்கன், அரசன் இருந்த ஏரிக்கரைக்கு வந்தான். வந்து அரசர்க்குப் பக்கத்தில் உலாவிக் கொண்டிருந்தான். புதிய ஆள் நடக்கும் அரவத்தைக் கேட்ட அரசர், “யார் அது?” என்று வினவினார்.

"நான் சக்கன். தேவர்களின் அரசன். உமக்கு வரம் தரு வதற்காக வந்தேன். உமக்கு வேண்டியதைக் கேளும். தருகிறேன்.

66

“அரசாட்சி, பெருஞ்செல்வம், சிறப்பு, ஆனைசேனை முதலிய எல்லாவற்றையும் விட்டுக் காட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு வேண்டியது ஒன்று இல்லை. நான் குருடனாக இருக்கிறேன். இப்போது எனக்கு வேண்டியது மரணம் ஒன்றுதான்" என்று கூறினார்அரசர்.

“சிவி மன்னா! நீர் மரணத்தை விரும்பும் காரணம் யாது? குருடனாக இருப்பதனால் மரணத்தை விரும்புகிறீரா?அல்லது வாழ்க்கையை வெறுத்து மரணத்தை விரும்புகிறீரா?”

66

குருடனாக இருப்பதனால் மரணத்தை விரும்புகிறேன்.”

சக்கன் கூறினார்: “தருமம் செய்ய வேண்டும் என்பதற்காகவே யாரும் தானம் செய்வது இல்லை. பிற்காலத்தில் ஏதேனும் தகுந்த பலன் கிடைக்கும் என்று கருதித்தான் எல்லோரும் தான தருமம் செய்கிறார்கள். அல்லது, இந்த உலகத்திலேயே பேரும் புகழும் பெற விரும்பித் தான தருமம் செய்கிறார்கள். ஒரு கண்ணைக் கேட்டபோது நீர் இரண்டு கண்களைத் தானமாகக் கொடுத்தீர். நீர் செய்த தானத்தின் உண்மையான நோக்கத்தை ஒளிக்காமல் கூறினால், நீர் கண்ணைப் பெறுவீர்."

66

'சக்க! நான் செய்த தானத்தின் பலனாக எனக்குப் பார்வை தர விரும்பினால், அதைக் கொடும், வேறு எதையும் கூற வேண் டாம்” என்றார் சிவி அரசர்.