உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

அன்று இரவு யாருக்குந் தெரியாமல் கோவிலுக்கு அருகில் உள்ள குறி சொல்லுகிற மரத்தின் பொந்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டான்.

பொழுது விடிந்த உடனே அஹிபாரகன் கோவிலுக்குப் போய் வணங்கியபிறகு குறி சொல்லுகிற மரத்தின் அருகில் வந்து இவ்வாறு கூறினான்: "ஓ தெய்வமே, எங்கள் அரசர் பெருமான் கார்த்திகை விழாவில் ஊர்வலம் புறப்பட்டு வந்தவர், திடீரென்று அரண்மனைக்குத் திரும்பிப் போய்விட்டார். அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு ஏதேதோ பேசிக்கொள்கிறார். அவர் ஏன் இவ்வாறு செய்கிறார்? அவர் உடம்புக்கு என்ன நோய்! என்பதைத் தெரிவித்தருள வேண்டும். அரசர் பெருமான் ண்டுதோறும் தெய்வங்களுக்குப் பெரும்பொருள் செலவுசெய்து பூசை செய்து வருகிறார். அப்பெருமானுக்கு என்ன நோய் என்பதை அருள் கூர்ந்து சொல்ல வேண்டும்.” இவ்வாறு அஹிபாரகன் குறி சொல்லும் மரத்தில் இருப்பதாகக் கருதப்படும் இயக்கன் என்னும் தெய்வத்தை வேண்டியக்கொண்டபோது, அம்மரத்திருந்து விடை கிடைத்தது. "ஓ சேனாபதியே, அரசனுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை. அரசன் உன் மனைவியாகிய உம்மாதந்தியின் மேல் காதல் கெண்டிருக்கிறான். உம்மாதந்தியை அடைந்தால் அவன் பிழைப்பான். இல்லையானால் பிழைக்க மாட்டான். அரசன் உயிர்பிழைக்க வேண்டுமானால் உம்மாதந்தியை அரச னுக்குக் கொடு'

தெய்வீக மரத்தில் இருந்து கிடைத்த இந்த விடையைக்கேட்ட அஹிபாரகன், அவ்விடத்திலிருந்து அரண்மனைக்குப் போனான். அரசன் இருந்த அறைக்கதவை மெல்லத் தட்டினான். அரசன், “யார் அது?” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான். அஹிபாரகன் உள்ளே சென்று இவ்வாறு கூறினான்: “கோவிலுக்குப் போய்த் தொழுத பிறகு அங்குள்ள குறி சொல்லும் மரத்தினிடம் போனேன். மரத்தில் இருக்கும் இயக்கன், 'அரசர் பெருமானை உம்மாதந்தி மயக்கி விட்டாள்' என்று கூறியது. ஆகவே, உம்மாதந்தி அரசர் பெருமானுக்கு உரியவள் ஆவள்.

அரசன்:

66

'அஹிபாரக, உம்மாதந்தியின்மேல் நான் காதல் கொண்டதாக இயக்கன் தெய்வம் சொல்லிற்றா?” “ஆமாம், மன்னவ!” என்றான் அஹி பாரகன். அரசன் தனக்குள் எண்ணினான். ‘என்னுடைய இழிசெயலை உலகம் முழுவதும் அறிந்துவிட்டது.’ அரசனுக்கு வெட்கம் உண்டாயிற்று. அரச நெறியில் இருந்து பேசினான்: “அறநெறி யில் இருந்து நான்