உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

மகிஷாசுரனுடைய படையுடன் போர் செய்கின்றன. ஒரு பூதம் கொற்றவைக்குக்குடை பிடிக்கிறது. கொற்றவையின் தோழியாகிய ஒரு பெண்தெய்வம், மண்டியிட்டவண்ணம் பகைவனை உடைவாளினால் ஒங்கி வெட்டுகிறது.

கொற்றவைக்கு எதிரே எருமை முகம் உள்ள மகிஷாசுரன் கனமுள்ள தண்டாயுதத்தை ஏந்தி இரண்டு கைகளினாலும் ஒங்கி அடிக்கப் பார்க்கிறான். ஆனால், கொற்றவைக்கு முன் அவன் ஆற்றல் நிற்கமுடியவில்லை. அவன் மனந் தளர்ந்து பின்னடைகிறான். அவன் தலைக்கு மேலே காணப்படுகிற குடை அவன் அசுரர்களின் அரசன் என்பதைக் காட்டுகிறது.

மகிஷாசுரனுடைய

கால்களுக்குக் கீழே

ஒரு வீரன் கொல்லப்பட்டு இறந்து கிடக்கிறான். ஒரு வீரன் சிங்கத்துக்கு எதிரில் தலை கீழாகக் குதிக்கிறான். இரண்டு அசுரர்கள் கத்தியும் கேடயமும் தாங்கி நிற்கிறார்கள். ஒரு அசுரன் ஒரு பூதத்துடன் போர் செய்கிறான். காதில் குண்டலங்களை யணிந்து சடைமுடியுடன் ஒருவர் (முனிவர்?) தரையிலே மண்டியிட்டு உட்கார்ந்து இடது கையைத் தரையில் ஊன்றி வலது கை விரவினால் மகிஷாசுரனைச் சுட்டிக் காட்டுகிறார்.

போர்க்களக் காட்சி நம் கண்முன்னே நிற்கிறது. போரின் கடைசி கட்டம்; அடுத்த நிமிஷத்தில் முடியப்போகிற போரிலே, கொற்றவையின் வெற்றியும் மகிஷாசுரனின் தோல்வியும் இப்போதே காணக் கிடக்கின்றன! இந்தச் சிற்பத்தின் அழகும் செவ்வியும் என்னே, என்னே! இந்தச் சிற்ப உருவத்தை அமைத்து வைத்த கலைச் செல்வன் யாரோ? அவன் பெயர் மறைந்து விட்டது. ஆனால், அவன் அமைத்து வைத்த இச்சிற்பக் கலை அவன் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறது! இச்சிற்பத்தின் செவ்விய அமைப்பைக் காணும்போது நம்முடைய மனம் பெருமை கொண்டு இறுமாப்புடன் துள்ளிக் குதிக்கிறது. தமிழ்நாடு, காவியப் புலவரைப் பெற்றிருந்தது போலவே சிறந்த சிற்பக் கலைஞரையும் பெற்றிருந்தது என்பதை நினைக்கும்போது நம்மை யறியாமலே நமக்குப் பெருமிதம் தோன்றுகிறது.

11. வராகப் பெருமாள் : வராகப் பெருமாள் என்பது திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகிய பன்றியின் உருவம். வராகப் பெருமாளைத் திருப்பன்றி யாழ்வார் என்றும் கூறுவர். திருமால் காட்டுப் பன்றியாகத் திருவவதாரம் செய்து, நீரிலே மூழ்கிக்கிடந்த நிலமகளை வெளியில் கொண்டுவந்தார் என்பது புராணக் கதை. வராகப்