உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

திருமாலின் கால்பக்கத்தில், ஆதிசேஷ மஞ்சத்துக்குக் கீழே, திருமகள் மண்டியிட்டுத் திருமாலை நோக்கிக் கைகூப்பித்தலை வணங்குகிறார். திருமகள் உருவச் சிற்பம் அழகாக இருக்கிறது.

திருமகள் உருவத்துக்கு அருகில், ஒரு தேவன் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கிறார். மற்றொரு தெய்வ உருவம் நின்று கொண்டிருக்கிறது. இந்த உருவத்தின் தொடைக்குக் கீழ்ப்பகுதி தண்ணீரில் மறைந்திருப்பதுபோலத் தோன்றுகிறது. இந்த இரண்டு தெய்வ உருவங்களும் யார் என்பது தெரியவில்லை.

66

"காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மாமணிகள்

ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப

மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்

அதுகே டவர்க்கிறுதி யாங்கு

வாய்ந்த

என்று பேயாழ்வார் கூறுவதுபோன்று, திருமால் காதுகளிலிருந்து தோன்றிய மது கைடபர்கள், அவரைக் கொல்ல முயன்று கடைசியில் அவர்களே இறந்து அழிந்தார்கள் என்னும் புராணக்கதை இந்தச் சிற்பத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது

17. திரிமூர்த்தி குகைக்கோயில் சிற்பங்கள் : திரிமூர்த்தி குகைக்கோயிலில், வடபுறத்தில் உள்ளது பிரமனுக்கு ஏற்பட்ட கோயில். இங்குள்ள துவாரபாலகர் தாடிமீசை யுடையவர்களாப் முனிவர்களை போன்று காணப்படுகிறார்கள். கருவறைக்குள் பிரமன் உருவம் சுவரில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இச் சிற்பத்தின் சிறப்பு என்னவென்றால், பிரமனுக்கு ஒரே முகம் இருப்பதுதான். தர்மராஜ இரதத்திலும் வராகப்பெருமாள் குகைக்கோயிலிலும் உள்ள பிரமன் உருவத்தில் மூன்று முகம் காணப்படுகிறது. நான்காவது முகம் பின்புறத்தில் மறைந்திருக்கிறதாகக் கருதவேண்டும். இவ்வாறு நான்கு முகமுடையபிரமனை, இந்த மும்மூர்த்தி குகைக்கோயிலில் ஒரே முகமுடையவராக அமைத்திருப்பது, கருதத்தக்கது. மேலும், இவ்வுருவம் இளமை பொருந்திய உருவமாகக் காணப்படுகிறது. குமரக்கடவுள் பிரமனைச் சிறையிட்டுத் தாமே பிரமனுடைய படைப்புத் தொழிலை நடத்தினார் என்று புராணம் கூறுகிறது. அந்தக் கதையை யுட்கொண்டு, இந்தப் பிரமனுடைய உருவம் குமரக்கடவுள் உருவம் போன்று அமைத்தனர்போலும்.