உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

நின்ற கோலம்; நான்கு கைகள்; வலது மேல் கை ஏதோ ஆயுதம் தாங்கியிருக்கிறது. மற்றொரு வலதுகை பாம்பைப் பிடித்திருக்கிறது. இடது மேல்கை ஏதோ ஆயுதம் தாங்கியிருக்கிறது. மற்றொரு இடதுகை இடுப்பில் தாங்கி யிருக்கிறது.

வடகோடியில் உள்ள உருவம் : சிவபெருமான் உருவம்; நின்ற கோலம் : தலைமயிர் பின்புறம் தாழ்ந்து தொங்குகிறது. வலதுகை அபய முத்திரை, இடது கை இடுப்பில் ஊன்றியிருக்கிறது. மற்ற இரண்டு கைகளில் ஏதோ ஆயுதங்கள் இருக்கின்றன.

6.

32. பிரமன் : வடக்குப் பக்கத்து இருகோடியில் உள்ள சிற்பங்கள்:- மேற்குக் கோடியில் உள்ளது பிரமன் நின்றவண்ணம். எதிர்ப்புறத்திலும் இரண்டு பக்கங்களிலும் ஆக மூன்று முகங்கள். மற்றொரு முகம் பின்புறத்தில் இருப்பதாகக் கருதவேண்டும். வலதுகையில் அபய முத்திரை, இடதுகை இடுப்பில் தாங்குகிறது. மற்றொரு வலதுகையில் ஜெபமாலையும் இன்னொரு இடது கையில் கெண்டியும் உள்ளன.

33. சிவன் : கீழ்க்கோடியில் உள்ளது : சிவபெருமான் நின்ற கோலம். காதுகளில் உள்ள குண்டலங்கள் தோள்மேல் தொங்குகின்றன. வலது கை அபய முத்திரை, இடதுகை இடுப்பின்மேல். இன்னொரு வலது கையில் மழு, மற்றொரு இடது கையில் ஏதோ ஆயுதம் ஏந்தியிருக்கிறார்.

34 அர்த்தநாரி : கிழக்குப் பக்கத்தில் இருகோடிகளில் உள்ளவை: வடகோடிச் சிற்பம்: அர்த்தநாரீசுவரர் எனப்படும் மாதொருபாகர். நின்றகோலம். வலப்புறம் ஆண்வடிவமும் இடப்புறம் பெண் வடிவமும் உள்ள ஒரே உருவம்; இடது புறத்து மார்பில் ஒற்றைக் கொங்கையுள்ளது. வலது புறக்கைகள் இரண்டில் ஒன்று அபய முத்திரையும் மற்றொன்றில் மழு (கோடரி)வும் அமைந்துள்ளன. இடது புறக்கைகள் இரண்டில் ஒருகை எழில் பெறத் தொங்குகிறது. மற்றொரு கையில் பூச்செண்டு (கண்ணாடி?) ஏந்தியிருக்கிறது. வலது காதில் குண்டலமும், இடது காதில் குழையும் விளங்குகின்றன. வலது புறத்து இடுப்பின்கீழ் பாம்பு ஒன்று படமெடுத்தாடுகிறது.

6

35. சிவன் : தென்கோடிச் சிற்பம் சிவபெருமான், நின்றகோலம். தலைப்பாகை போன்ற தலையணி. வலதுகை அபய முத்திரை, இடதுகை இடுப்பில் தாங்கியுள்ளது. மற்ற இரண்டு வலது இடது கைகள் ஏதோ ஆயுதங்களைத் தாங்கியிருக்கின்றன.