உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

பெரிய பொன் ஒலையும் காணப்படுகின்றன. மற்றோர் இராணியின் வலக்காதில் மிகப் பெரிய பொன் ஒலையும் இடதுகாதில் கனமான குண்டலமும் காணப்படுகின்றன. இந்தச் சிற்ப உருவத்துக்குமேலே பல்லவர் காலத்து எழுத்தினால் ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதிராஜன் என்று கல்லில் எழுதப் பட்டிருக்கிறது. அஃதாவது இந்த உருவம் மகேந்திர வர்மனுடைய உருவம் என்று எழுதப் பட்டிருக்கிறது.

சிம்ம

எனவே, இந்தச் சிற்ப உருவங்கள் முறையே விஷ்ணுவையும் அவன் மகன் (முதலாம்) மகேந்திரவர்மனையும் குறிக்கின்றன என்பது தெரிகிறது.

சில அபிப்பிராயங்கள்

ஆனால், அரசாங்கத்துச் சாசன இலாகாவில் இருந்த காலஞ் சென்ற ராவ்பகதூர் H.கிருஷ்ண சாஸ்திரி என்பவர் இச்சிற்பங்களைப் பற்றி வேறு விதமாகக் கூறிச்சென்றார். உட்கார்ந்திருக்கும் அரசன் நரசிம்மவர்மன் I (வாதாபி கொண்டவன்) என்றும், எதிரில் நிற்கும் அரசன், அவனுடைய தகப்பனான மகேந்திரவர்மன் I என்றும் எழுதினார். இதற்குக் காரணம் இந்த எழுத்துக்கள் நரசிம்மவர்மன் I மகனான பரமேசுவரவர்மன் I காலத்து எழுத்துக்களைப் போல இருக்கின்றனவாம். ஆகையால், பரமேசுவரவர்மன் தன் தகப்பனான நரசிம்மவர்மனையும் தன் பாட்டனான மகேந்திரவர்மனையும் சிற்ப உருவமாக அமைத்தானாம்.

இதில் இவர் பெரியதவறு செய்கிறார். சிற்பத்தின் மேற்புறம் எழுதப்பட்டிருப்பது ஸ்ரீ சிம்மவிண்ணபோத்ராதிராசன் என்பது. சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசனை இது குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், கிருஷ்ண சாஸ்திரி, சிம்மவிஷ்ணு என்னும் பெயரை நரசிம்மவிஷ்ணு என்று மாற்றுகிறார். மாமல்லனாகிய முதலாம் நரசிம்ம வர்மனுக்கும், ராஜசிம்மனாகிய இரண்டாம் நரசிம்ம வர்மனுக்கும் நரசிம்மவிஷ்ணு என்னும் பெயர்கள் உண்டாம். நரசிம்மவிஷ்ணு என்னும் பெயர் சுருக்கமாக சிம்மவிஷ்ணு என்றும் கூறப்படுமாம். ஆகவே இந்தச் சிற்பத்தின் மேற் புறத்தில் எழுதப் பட்டுள்ள சிம்மவிஷ்ணு என்பது நரசிம்ம விஷ்ணு என்பவனை, அஃதாவது வாதாபிகொண்ட நரசிம்ம வர்மனைக் குறிக்கிறது. என்று எழுதுகிறார். இவர், சிம்ம விஷ்ணுவை நரசிம்ம விஷ்ணுவாக்குகிறார்.