உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

159

இனி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற மூன்று மனித உருவங்களும், அதற்கு எதிர்ப்புறத்தில் யானைகளின் உருவங்களும் பார்ப்போம். தலையற்ற மூன்று உருவங்கள், நாகராசனின் கோபப் பார்வையினால் இறந்து போன சகரக் குமாரர்களைக் குறிக்கிறது. சகரகுமாரர்கள் அறுபதினாயிரவரையும் சிற்பத்தில் அமைத்துக் காட்ட முடியாதாகையினால், மூன்று தலையற்ற உருவங் களாகச் சிற்பிகள் காட்டியுள்ளார்கள். தலையற்ற உடலாக அமைத்து இறந்து போனவர்கள் என்பதைச் சிற்பிகள் காட்டுவது அவர்களின் நுண் அறிவைப் புலப்படுத்துகிறது. தமிழில் ஒருமை பன்மை என்று இரண்டு பெண்கள் மட்டும் இலக்கண நூலில் கூறப்படுகின்றன. வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று எண்கள் இலக்கண நூலில் கூறப்படுகின்றன.

வடமொழி முறையைப்பின்பற்றி, சகர குமாரர்கள் பலர் என்பதைக்குறிக்க மூன்று உருவங்களாக அமைத்தனர் போலும். சிற்பத்தில் இவ்வளவு நுட்பமாகவும் விளக்கமாகவும் காட்டப் பட்டிருப்பது பாராட்டத்தக்கது இச்சிற்பத்தில் காணப்படும் யானைகள் ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசனையும் அவனுடன் வந்த நாக பரிவாரங்களையும் குறிக்கிறது. பெரிய யானை (நாகராசன்) கோபித்துப் பார்ப்பது போலக் காணப்படுகிறது. இதன் பார்வை யினால், சகர குமாரர்கள் இறந்து மாண்ட செய்தி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற உடலோடு உள்ள (மூன்று உருவங்களில்) காட்டப் பட்டிருக்கிறது.

நாகராசன், பாம்பரசன் ஆகையால், (அகழியில் நாகராசன் காட்டப்பட்டிருப்பது போல) பாம்பு உருவத்துடன் காட்டப் படாமல், யானை உருவத்துடன் ஏன்காட்டப்பட்டான் என்கிற கேள்வி உண்டாகிறது. நாகலோகத்தில், கங்கை நீர் பாய்ந்து வெள்ளக் காடாகியபோது நாகராசனாகிய ஜுவலனப்பிரபன், “அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டது போல” கடுஞ்சினம் கொண்டு சாகரரைச் சினந்து நோக்கினான் என்று இக்கதை எழுதிய காவியப்புலவர் கற்பனை செய்து எழுதியிருக்கிறார். நாகம் என்னும் சொல்லுக்கு யானை என்றும், பாம்பு என்றும் இரண்டு அர்த்தங்கள் இருக்கிறபடியால், இக்காவியப் புலவன் இரண்டு பொருளிலும் சிலேடையாக இச்சொல்லை அமைத்து எழுதியிருக்கிறார். காவியப்புலவர் இவ்வாறு

சிலேடையாகக் கூறிய கருத்தை