உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

161

ஒவியப்புலவராகிய சிற்பிகளும், சிலேடையையும் உபமானத்தையும் தமது சிற்பக்கலையில் அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். காவியப் புலவர்களை ஒவியப்புலவர்கள் எவ்வளவு நுட்பமாகப் பின்பற்றிச் சிற்பத்தைச் செய்திருக்கிறார்கள். என்பது இதனால் நன்கு விளங்கும். அன்றியும் சிற்பிகள் யானையை அமைத்திருக்கிற இடத்தில், நாகராசன் உருவத்தைப் பாம்பு உருவமாக அமைத்திருந்தால் இந்தச்சிற்பம் இவ்வளவு கம்பீரமாகவும் இவ்வளவு அழகாகவும் விளங்குமா என்பதை யோசித்துப் பார்த்தால் இதன் சிறப்பு நன்கு விளங்கும். யானையின் உருவம் நாகராசனின் உருவத்தைக் குறிக்கிறது. (நாகம்-, பாம்பு, யானை.)

படம் 5 காண்க. இந்தப் பகுதியில் மனிதர் சிலர் காணப்படு கின்றனர். இவர்களில் ஒரு ஆள், தனது இடது தோளின்மேல் குடம் ஒன்றை வைத்துக்கொண்டு வலது கையினால் எதையோ தண்ணீரில் எறிவது போன்று காணப்படுகிறது. இந்த உருவத்தைச் சிலர். சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் குடத்தில் நீர் கொண்டு போகிற அர்ச்சகன் என்று கருதுகிறார்கள். அது தவறு, குடத்தில் இருப்பது இறந்தவர் எலும்பு. அதை இந்த ஆள் நீரில் போடுகிறார். அதாவது இறந்தவர் எலும்புகளை ஆற்றில் போடுகிற வழக்கத்தை அந்தச்சிற்பம் காட்டுகிறது. பகீரதன் கங்கையைக் கடலுக்கு இழுத்துச் சென்றபோது, இறந்துபோன சாகரர்களுடைய எலும்புகளைக் கங்கை அடித்துக்கொண்டு போயிற்று என்றும், அது முதல் இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிற வழக்கம் ஏற்பட்டதென்றும் ஜிதநாத தீர்த்தங்கரர் புராணம் கூறுகிறது. ஆகவே, இந்தச் சிற்பம் இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிறதைக் காட்டுகிறது.

இந்த உருவத்தின் பக்கத்தில் இன்னொரு ஆள் எதையோ ஒரு பொருளைக் கையில் தூக்கி வைத்திருப்பது போல் காணப்படுகிறது. தை, கங்கையில் குளித்து துணியைப் பிழிகிறான் என்று சிலர் கூறுகிறார்கள். இது தவறு. தோய்த்த துணியைப் பிழிவது போல் இல்லாது, இது. கனமான பொருளாகக் காணப்படுகிறது. சிலர் இப்பொருளை Cornucopia என்று கூறுகிறார்கள் Cornucopia என்பது கிரேக்க உரோம தேசங்கள் உணவுப் பொருள்களின் அபரிமிதமான விளைச்சலைக் காட்டுவதற்காகச் சிற்பிகளும் ஒவியர்களும் காட்டும் ஒரு அடையாளம். இது, மாட்டுக் கொம்பின்