உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

சாலிமுத லாகிய தானியம் அனைத்தும்

ஏலமின் கோடெழில் திகழ மருந்து

தண்டுத லின்றி வண்டோகை கொடுக்கும்,

கத்தித் தோமரத் தண்டெழு நாஞ்சில் வித்தக வாள்வளை விற்கணை பிறவும் மிக்க வாயுதம் விரலங் கரக்கை

பக்கரை யினையன மானோகை கொடுக்கும், பெரியோர் சிறியோர் பேதையர் தமக்கும் கரிபரி தேர்க்கும் கவினுடை மணிப்பூண் சிங்குதல் இன்றி பிங்கலிகை கொடுக்கும், துகிலொடு நூலுங் கவரியுஞ் சவரியும் தகவதின் ஈயுந் தான்பது மையே, தண்ணிய காற்றும் சந்தனக் குழம்பும் புண்ணிய நறுநீர்த் திவலையும் நிழலும் என்றிவை முதலாச் சங்கை பயக்கும், தாளமுஞ் சங்கும் சகண்டையுந் திமிலையும் காளமும் குழலும் கரடியுந் துடியும்

வீணையும் யாழும் விளங்கு சூளிகையும் இனையன பிறவும் வேசங்கை கொடுக்கும், எழுத்தும் சொல்லும் பதமும் சுகலோகமும் விழுத்தகு நூலும் புராணமும் விருத்தமும் சோதிட நிமித்தமும் சொல்லிய பிறவும் காளை என்னும் கனநிதி கொடுக்கும், உழவும் தொழிலும் வரைவும் வாணிகமும் செழுமிசை விச்சையும் சீலமும் பிறவும் ஒழிவுதல் இன்றி மாகாளை கொடுக்கும், மரகதம் வச்சிரம் வயிடூ ரியமும்

பரவிய நீலமும் பதும ராகமும்

கோமே தகமும் கொழும்புருட ராகமும் தாமமும் முத்தும் தடமா ணிக்கமும் சந்திர காந்தமும் சூரிய காந்தமும் இந்திர நீலமோ டெழுவகை லோகமும் தவ்வுத லின்றிச் சவ்வாதம் ஈயும், இன்னன முதலா பன்னிய பிறவும்