உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

187

பழைய காலம் என்பது கி. பி. 600-க்கு முற்பட்ட காலம். இந்தக் காலத்தில், கோயில் கட்டிட அமைப்புகள் முழுவதும் அமையப்பெற்று, மரத்தினாலும் செங்கற்களினாலும் அமைக்கப் பட்டன.

பல்லவர் காலக் கட்டிடம் என்பது கி. பி. 600 முதல் 900 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் கற்றளிகள் (செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோயில் கட்டிடங்கள்) ஏற்பட்டன.

சோழர் காலம் என்பது, பிற்காலச் சோழர் காலம். இது கி. பி. 900 முதல் 1300 வரையில் உள்ள காலம். இந்தக் காலத்தில் சோழ அரசர்கள் புதிதாகக் கற்றளிகளை அமைத்ததோடு ள பழைய செங்கற் கோயில்களை இடித்து அக்கோயில்களைக் கற்றளியாகப் புதுப்பித் தார்கள். அன்றியும் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் கோயில்கள் அமைக்கப்பட்ட காலமும் இதுவே. மேலும், சிவன் கோயில்களிலே அம்மன் சந்நிதிகள் தனியாகக் கட்டப் பட்ட காலமும் இதுவே. சோழர் காலத்துக்கு முன்பு, சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனியாகக் கோயில் இல்லை. இச்செய்தியைச் சோழர் காலத்துச் சாசனங்களில் இருந்து அறிகிறோம்.

பாண்டியர் கட்டிடக் காலம் என்பது கி. பி. 1300 முதல் 1500 வரையில் உள்ள காலம்.

விஜயநகர அரசர் கட்டிடக் காலம் என்பது கி. பி. 1500 முதல் 1700 வரையில் உள்ள காலம்.

கட்டிடக் கலையைப் பற்றி பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர காலம் என்று சொல்லும்போது, இந்தக் காலங்களில் கோயில் கட்டிடங்களில் வெவ்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன என்று கருதக்கூடாது. பெரிய மாறுதல்கள் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், தூண்கள், கர்ணகூடு, கோஷ்டபஞ்சரம் முதலிய உறுப்புகளில் அந்தந்தக் காலத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. இந்த மாறுதல்களைக் கொண்டுதான் மேற்சொன்னபடி காலத்தைப் பிரித்திருக்கிறார்கள்.

குகைக் கோயில்களும் பாறைக் கோயில்களும் கி. பி. 600 - இல் இருந்து 850 வரையில் தமிழ்நாட்டிலே அமைக்கப்பட்டன. குகைக் கோயிலைத் தமிழ் நாட்டிலே முதல் முதல் அமைத்தவன், முன்னர் சொல்லியபடி, மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன். அவனுக்குப்