உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

189

வேண்டும். ஏனென்றால், பல்லவர் காலத்துக் கோயில்களிலே கோஷ்ட பஞ்சரங்களில் இத்தெய்வ உருவங்கள் அமைக்கப்பட வில்லை.

கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையிடையே கும்ப பஞ்சரம் என்னும் சிற்ப உறுப்பு அமைக்கப்பட்டிருக்கும். கும்ப பஞ்சரம் என்பது, அடியில் குடம் போன்றும் மேலே கொடிச் சிற்ப வேலை யமைந்தும் ஆன சிற்பவேலையாகும்.

தோள் உறுப்புகள்

தோள் என்னும் பிரஸ்தரத்தின் மேலே, கர்ண கூடு, பஞ்சரம், சாலை என்னும் உறுப்புகள் உண்டு. கர்ணகூடு என்பது பிரஸ்தரத்தின் கடைசி மூலையில் அமைக்கப்படும் உறுப்பு. சாலை என்பது பிரஸ்தரத்தின் மத்தியில் அமைக்கப்படும். பஞ்சரம் என்பது, கர்ண கூட்டுக்கும் சாலைக்கும் இடையில் அமைக்கப்படுகிற சிறு உறுப்பு.

இனி, பண்டைக் காலத்திலிருந்து நாளடைவில் கோயில்கள் கட்டிட வகையில் எப்படி வளர்ச்சி யடைந்தன என்பதைக் கூறுவோம்.

பண்டைக் காலத்திலே, அதாவது பல்லவர் காலம் வரையில் (கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு), திருமால், சிலபெருமான், கொற்றவை முதலிய தெய்வங்களுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன. திருவுண்ணாழிகை (கருவறை)யும் அதைச் சார்ந்து அர்த்த மண்டபமும் மட்டும் அக்காலத்தில் இருந்தன. வேறு மண்டபங்களோ துணைக் கோயில்களோ அக்காலத்தில் இல்லை.

பிற்காலத்திலே, அர்த்த மண்டபத்தைச் சார்ந்தாற்போல் கோயில் முன்புறத்திலே முகமண்டபம் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

பரிவார ஆலயங்கள்

கி. பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பிற்காலச் சோழர் ட்சியில், சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் கட்டப்பட்டன. இக்காலத்துக்கு முன்பு சிவன் கோயில்களிலே அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் இருந்ததில்லை. தேவாரத்திலே, அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகிய நாயன்மார்கள் சிவபெருமானையும் தேவியையும் பாடியது உண்மையே, ஆனால், அக்காலத்தில் தேவிக்கென்று சிவன் கோயிலில் தனியாக ஆலயம் இருந்ததில்லை. தேவிக்கென்று தனி ஆலயம் இருந்தால், அது சிவபெருமான்