உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

மகேந்திரவர்மனுடைய முன்னோர்களால் கட்டப்பட்ட செங்கற் கோயில் ஆகும்.

குகைக் கோயில்

கோயில் அமைப்பதில் தமிழ்நாட்டில் முன்பு இல்லாத புதிய முறையை மகேந்திரவர்மன் முதன் முதல் உண்டாக்கினான். அஃதென்னவென்றால், ஒரே கருங்கற் பாறையைக் குடைந்து, மண்டபத்தையும் கருப்பக்கிருகத்தையும் அமைக்கிற் புதிய முறையை இந்த அரசன் புதியன புகுதலாக அமைத்தான். இவ்வாறு பாறைகளில் அமைக்கப்பட்ட கோயில்களுக்குக் “குகைக் கோயில்கள்” என்பது

பெயர்.

ஆனால், மகேந்திரவர்மன் காலத்தில் கற்றளிகள் ஏற்பட வில்லை. கருங்கற்களினால் சுவர் எழுப்பிக் கோயில் கட்டும் கற்கோயில்களை கற்றளிகள் மகேந்திரவர்மனுடைய பேரன் காலத்தில் ஏற்பட்டன.

மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைந்து குகைக் கோயில் களை உண்டாக்கும் புதிய முறையை முதன் முதலாகத் தமிழ் நாட்டிலே ஏற்படுத்தினான் என்று கூறினோம். ஆகவே அவனுக்குச் சேதகாரி என்னும் பெயர் ஏற்பட்டது. சேதகாரி என்றால் சேதியங் களை அமைப்பவன் என்பது பொருள். (சேதம், சேதியம் = கோயில்.)

மகேந்திரன் அமைத்த மண்டளிகள்

மகேந்திரவர்மன் குகைக் கோயில்களை மட்டும் அமைத்தான் என்று கருதவேண்டா. சில கோயில்களைச் செங்கற் கட்டிடங் களாகவும் அமைத்தான் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அவ்வாறு வன் அமைத்த செங்கற் கட்டிடக் கோயில்கள் பிற்காலத்தில் அழிந்துவிட்டன். காஞ்சிபுரத்து ஏகாம்பரேசுவரர் கோயில் பௌர்ணமி மண்டபத்தில் ஒரு கருங்கல் தூணில் மகேந்திரனுடைய சிறப்புப் பெயர்கள் சில பொறிக்கப்பட்டுள்ளன. அபிமுக, சித்ரகார புலி, கூற்றம்பு முதலிய மகேந்திரனுடைய சிறப்புப் பெயர்கள் அத்தூணில் எழுதப்பட்டுள்ளன. இதனால் என்ன தெரிகிற தென்றால், மகேந்திரவர்மன் குகைக்கோயில் அல்லாமல் வேறு கோயிலையும் கட்டினான் என்பதும், அக்கோயில் பிற்காலத்தில் அழிந்து