உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

இருக்கவேண்டும்? இக்கோயிற்சுவர்களில் இவன் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தியிருந்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.

மகேந்திரவர்மன் காலத்தில் இருந்து வேறு கட்டிடக் கோயில் களைப்பற்றியும் இங்குக் சிறிது கூறவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த நாவுக்கரசர் இக்கோயில்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கி. பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கருதப்படுகிற சோழன் செங்கணான் கட்டிய கோயில்கள், அப்பர் காலத்தில் இருந்தன என்றும், சோழன் செங்கணான் எழுபத்தெட்டுக் கோயில்களைக் கட்டினான் என்றும் நாவுக்கரசர் கூறுகிறார். "பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடெட்டும்”3 இவன் அமைத்தான் என்று கூறுகிறார். நாவுக்கரசருக்குப் பின்னர் இருந்தவரான திருமங்கையாழ்வார், இந்தச் செங்கட் சோழன் திருநறையூர் மணிமாடக் கோயில் உட்பட எழுபது கோயில்களைக் கட்டினான் என்று கூறுகிறார்.

66

"இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசற்கு

எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

(பெரிய திருமொழி. 6 ஆம் பத்து 6 ஆம் திருமொழி. 8)

செங்கட் சோழன் கட்டிய கோயில்களைப் பெருங் கோயில் என்று திருநாவுக்கரசரும், எழில் மாடம் என்று திருமங்கை ஆழ்வாரும் கூறுகிறபடியினாலே, அவை பெரிய கட்டிடங்களாக இருந்தன என்று அறிகிறோம். ஆனால் அக்கோயில் கட்டிடங்கள் செங்கல்லினால் கட்டப்பட்டவையாகையினாலே அவை திருநாவுக்கரசர் காலத்திலே பழுதுபட்ட நிலையில் இருந்தன என்பது தெரிகிறது.

அப்பர் கூறுகிற சிலவகைக் கோயில்கள்

செங்கற்களினாலே அமைக்கப்பட்ட அந்தக்காலத்துக் கோயில் விமானங்களின் அமைப்பு, பலவிதமாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அக்காலத்துக் கோயில் விமான அமைப்புகள் சிலவற்றின் பெயரைத் திருநாவுக்கரசர் கூறுகிறார்.

“பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்