உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

203

மகேந்திரன் குகைக்கோயில்களில் காணப்படுகிற மகர தாரணத்தின் சிற்பம்; இரு வளைவாக இருப்பது காண்க.

மகரதோரணம்: மகேந்திரவர்மன் குகைக் கோயிலுள்ள மகரதோரணங்கள் அல்லது திருவாசிகள் இரண்டு வளைவுள்ளன வாக இருக்கும். ஒரே வளைவுள்ளதாக இராது.

6

திருநிலையறை: (கருப்பக் கிருகம்) குழவிக்கல் போன்ற உருண்டையான இலிங்கம் கருப்பக் கிருகத்தில் காணப்படுகின்றன. பட்டை தீட்டப்பட்ட இலிங்க உருவங்கள் காணப்படா. இலிங்கத்தின் பின்புறச் சுவரில் சோமஸ்கந்த மூர்த்தியின் உருவம் இராது. வெறும் சுவராகத்தான் இருக்கும்.

கூடு: கோயில் கட்டிடத்தில் கூடு எனப்படும் ஒரு பகுதியுண்டு. இக் கூடுகள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான சித்திர அமைப்புடன் காணப்படுகின்றன. மகேந்திரவர்மன் குகைக் கோயல்கள் சிலவற்றில் கூடுகளும் காணப்படுகின்றன. அந்தக் கூடுகளின் அமைப்பைக் கொண்டும் அந்தக்

குகைகள்

மகேந்திரவர்மன் காலத்தவை என்பதை அறியலாம். மகேந்திரவர்மன் காலத்துக் கூடுகளுக்குள் மனிதன் தலையுருவம் அமைக்கப்பட்டிருக்கும்.

மகேந்திரவர்மன் குகைக் கோயில்கனில் காணப்படுகிற

CC

ன்னும் உறுப்பின் அமைப்பு.