உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

205

ஒன்பது அடி உயரமும் உள்ளது. மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் கருப்பக்கிருகம் மேற்குப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அகலமும் நீளமும் 7 அடி 10 அங்குலம் உள்ள சதுரமாயும், உயரம் 7 அடி உள்ளதாயும் அமைந்துள்ளது. இந்தக் கருப்பக்கிருகத்தின் தரையில் 2 அடிச் சதுரமுள்ள குழியொன்று காணப்படுகிறது. இது, இங்கு முன்பு சிவலிங்கம் இருந்த அடையாளம் ஆகும். இதன் பக்கத்தில் ஒரு அடிச் சதுரம் உள்ள இன்னொரு குழி இருக்கிறது. இது மகேந்திரவர்மனுடைய உருவம் சிவலிங்கத்தின் பக்கத்தில் அமைந்திருந்தது என்பதை இங்குள்ள சாசனம் கூறுகிறது. இப்போது சிவலிங்கமும் மகேந்திவர்மன் உருவமும் இங்கு இல்லை.2

2

திருநிலையறையின் (கருப்பக்கிருகத்தின்) வாயிலில் இரண்டு துவாரபாலகரின் உருவங்கள் பாறையில் செதுக்கியமைக்கப் பட்டுள்ளன. ஒருகாலை யூன்றி இன்னொரு காலை மடக்கி நின்று கதாயுதத்தைத் தரையில் ஊன்றி அதன் மேல் இரண்டு கைகளையும் தாங்கிக்கொண்டு துவாரபாலகர் உருவங்கள் நிற்கின்றன.

3

கருப்பக்கிருகத்துக்கு எதிரேயுள்ள மேற்குப்புறப் பாறையில், மண்டபச் சுவரிலே, சுமார் ஏழு அடிச் சதுரத்தில் கங்காதர மூர்த்தியின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பத்தைப்பற்றி இந் நூலில் மற்றோரிடத்தில் காண்க.

ச்

பல்லாவரத்துக் குகைக்கோயிலில் காணப்படுவது போலவே இங்கும், மண்டபத்தின் தூலத்திலும் தூண்களிலும் மகேந்திரவர்ம னுடைய சிறப்புப் பெயர்களும் சாசனங்களும் எழுதப்பட்டுள்ளன. இச் சாசனங்களில் ஒன்று, நான்கு வடமொழிச் செய்யுட்களாக அமைந்துள்ளது. இச் சாசனம் கீழ்வரும் கருத்தைக் கூறுகிறது.

66

4

"வயல்களாகிய மாலையை யணிந்தவளும் விரும்பத் தக்க தன்மையையும் இனிய நீரையும் உடையவளுமாகிய காவிரியைக் கண்டு, ஆறுகளைத் தமது முடியிலே சூடுகிற சிவபெருமான் எங்கே இவள்மேல் விருப்பங்கொண்டு விடுவானோ என்று அச்சங் கொண்ட மலைமகள், தன்னுடைய தந்தையின் இல்லத்தைவிட்டு வந்து இந்த மலையிலே நிரந்தரமாகத் தங்கியிருந்து 'இந்தக் காவிரி யானவள் பல்லவன் காதலி' என்று கூறிக்கொண்டேயிருக்கிறாள்.