உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கு

இங்குச் செதுக்கப்பட்டுள்ள கணபதியின் உருவம் வெகு அழகானது. இளங்குழந்தை யொன்று உட்கார்ந்திருப்பதுபோலக் காணப்படுகிறது. இது வலம்புரி விநாயகர்; இந்தக் கணபதியின் உருவத்தைப் பிற்காலத்தில் செதுக்கியிருக்கவேண்டும் என்று சிலர் கருதுவது தவறு. இது இக்குகை அமைக்கப்பட்ட அதே காலத்தில் அமைக்கப்பட்டதாதல் வேண்டும். மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட கணபதி க உருவங்கள் புதுக்கோட்டையிலும் காணப்படுகின்றன.

4. மண்டகப்பட்டுக் குகைக்கோயில்

இவ்வூர், தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் தாலுகாவில் விழுப்புரம் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 12 மைலில் இருக்கிறது. தளவானூருக்குத் தென்மேற்கே 6 மைலில் உள்ளது. இந்த ஊருக்கு மேற்கே அரை மைலில் உள்ள சிறு பாறைக்குன்றின் வடக்குப் பக்கத்தில் ஒரு குகைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தளவானூர்க் குகைக்கோயிலைப் போன்றது. தளவானூர்க் கோயிலைப் போன்றே, மண்டபத்தின் வெளிப்புறத்தில், இரண்டு கோடியிலும் துவாரபாலகர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.12

மண்டகப்பட்டுக் குகைக்கோயிலின் கைக்கோயிலின் தரையமைப்பு.

மண்டபம் 22 அடி நீளம்; 24 அடி அகலம்; 9 அடி உயரம் உள்ளது. மண்டபத்தின் தென்புறப் பாறையில் மூன்று திருநிலையறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மூன்று திருநிலையறைகளின் தரையில் மூன்று சதுரமான சிறு குழிகள் காணப்படுகின்றன. இந்தக் குழிகள், முற்காலத்தில் இங்கு மூன்று தெய்வத் திருமேனிகள் வைக்கப்