உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

ன்னவாச வாசல் குகைக்கோவில் தரையமைப்பு

இக்குகையின் பாறைச்சுவரில் சுண்ணம் பூசப்பட்டு அழகான வண்ண ஒவியங்கள் எழுதப்பட்டுள்ளன. கருப்பக் கிருகத்தின் எதிரே மண்டபத்தின் மேற்புறத்தில், தாமரையும் அல்லியும் அரும்பிப் பூத்துத் தழைத்துள்ள தாமரைக்குளத்தின் ஓவியம் அழகாகக் காட்சி யளிக்கிறது. இரண்டு தூண்களிலும் அரம்பையர் இரண்டு பேர் நடனம் ஆடுவது போன்ற காட்சி எழுதப்பட்டுள்ளது. மேலும், இக் குகைக் கோயிலை அமைத்த மகேந்திரவர்மன், அவன் பட்டத்தரசி கிய இவர்களின் வண்ண ஓவியமும் இங்குக் காணப்படுகின்றன.

மகேந்திரவிக்ரமன் காலத்தில் எழுதப்பட்ட இந்த வண்ணச் சித்திரங்கள், அஜந்தா மலைக்குகை ஓவியங்களைப் போன்று வியக்கலைஞர்களால் புகழப்படுகின்றன. இந்த ஓவியங்களின் விளக்கத்தை இந்நூலில் "ஓவியங்கள்" என்னும் தலைப்பின்கீழ்க்

காண்க.

பிற்காலத்திலே, கி. பி. 862இல் அவனிபசேகரன் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட இங்குள்ள ஒரு சாசனம் மதுரையாசிரியன் இளங்கௌதமன் என்பவன் இங்கு ஒரு மண்ட பத்தைக் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால், அப்படிப்பட்ட மண்டபம் இப்போது இங்கு இல்லை.