உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

மலைமேல் உள்ள வேதகிரிஈசுவரர் கோவில் சாசனம் ஒன்று, மூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு ஸ்கந்த சிஷ்யர் என்பவர் தானம் செய்திருந்ததையும், பிற்காலத்தில் நரசிம்மவர்மன் அந்தத் தானத்தை உறுதிப்படுத்தியதையும், இன்னும் பிற்காலத்தில் முதலாம் ராஜகேசரி வர்மன் ஆதித்தியன் அதனையே மீண்டும் உறுதிப்படுத்தி யதையும் கூறுகிறது.2° இதனால், இக் குகைக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் சிவலிங்கமூர்த்திக்கு மூலஸ்தானத்துப் பெருமான் எனும் பெயர் வழங்கியதாகத் தெரிகிறது.

14. திருக்கோகர்ணத்துக் குகைக்கோயில்

21

புதுக்கோட்டை ஆலங்குடித் தாலுகாவில் திருக்கோகர்ணம் இருக்கிறது. இங்குள்ள பாறையில் குகைக்கோயில் அமைக்கப் பட்டிருக்கிறது. இது சித்தன்னவாசல் குகைக்கோயிலைப் போன்றது. திருநிலையறையில் சிவலிங்கம் இருக்கிறது. மண்டபச் சுவரின் ஒருபுறத்தில் புடைப்புச் சிற்பமாக" பிள்ளையாரின் (கணேசர்) பெரிய உருவமும், இன்னொருபுறத்தில் கங்காதரமூர்த்தியின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் மகேந்திரவர்மன் காலத்துத் தூண்கள் போன்றுள்ளன. 22இக்குகைக்கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டதென்று கருதப்படுகிறது. புதுக்கோட்டையும், மகேந்திர வர்மன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது இதனால் தெரிகிறது.

15. மகாபலிபுரத்துக் குகைக்கோயில்கள்

மகாபலிபுரம் என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற மாமல்லபுரம் சென்னைப்பட்டினத்திற்கு தெற்கே நாற்பது மைலில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல்மல்லை என்னும் பெயரு டனிருந்த இந்தப் பட்டினம் பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. மல்லை அல்லது கடல்மல்லை என்னும் பழைய பெயரை மாற்றி, மகேந்திரவர்மனின் மகனான நரசிம்மவர்மன் தன் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை இதற்குச் சூட்டி மாமல்லபுரம் என்று பெயரிட்டான். மாமல்லபுரம் பிற்காலத்தில் மகாபலிபுரம் என்று வழங்கப்பட்டது.

மாமல்லபுரத்திலே பல குகைக்கோயில்களும், “இரதக்” கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவை நரசிம்ம வர்மன் (மாமல்லன்) காலத்திலும் அவன் பேரனான பரமேசுவரவர்மன்