உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கோயிலில் இருந்திருக்கக்கூடும் என்று கருதுவது தவறாகாது. 'இவ் வுருவத்தைப் பற்றிச் சிற்பங்கள் என்னும் பகுதியில் காண்க.

II. பஞ்சமூர்த்தி குகைக்கோயில்

மேலே சொன்ன கோடிக்கால் மண்டபம் என்னும் துர்க்கை குகைக்கோயிலுக்குத் தெற்கே ஒரு குகைக் கோயில் உண்டு. இதில் ஐந்து திருநிலையறைகள் காணப்படுவதால் பஞ்சமூர்த்தி குகைக் கோயில் என்று பெயர் கொடுத்தோம். இதன் பழைய பெயர் தெரியவில்லை. இங்குச் சாசன எழுத்துக்கள் காணப்படவில்லை. இந்தக் குகைக்கோயில் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப் பட்டது என்பதை இதன் அமைப்புகளைக் கொண்டு உறுதிப் படுத்தலாம். இதுவும் மேற்குப் பார்த்த கோயிலே.

இதன் அமைப்பு பல்லாவரத்துக் குகைக்கோயிலைப் போன்றதே. இதிலும் ஐந்து திருநிலையறைகள் உள்ளன. நடுவில் உள்ளது சற்றுப்பெரியது. திருநிலையறைக்குச் செல்வதற்குப் படிகள் உள்ளன. ஆனால், இவை செம்மையாக அமைக்கப்படாமல் கரடுமுரடாக உள்ளன. கருப்பக்கிருகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிவலிங்கம் அமைந்திருந்தது என்பதற்கு அடையாள மாக ஒவ்வோர் அறையிலும் மூன்றங்குல ஆழமுள்ள சிறு குழிகள் காணப்படுகின்றன. திருநிலையறை வாயில்களில் துவாரபாலகர் உருவங்கள் அமைந்துள்ளன. இவை யாவும் மகேந்திரவர்மன் காலத்துத் துவாரபாலகர்களின் உருவங்களைப் போலவே காணப் படுகின்றன. முன்மண்டபம் 35 அடி 2 அங்குல நீளமும், 12 1/2அடி அகலமும் உடையது.

முன்மண்டபத்திலே இரண்டுவரிசையுள்ள நான்கு தூண்கள் உள்ளன. முன்வரிசையில் உள்ள நான்கு தூண்களும் வழக்கம்போல் மேற்புறமும் அடிப்புறமும் சதுரமாகவும் மத்தியில் எண்கோணப் பட்டையாகவும் அமைந்துள்ளன. உள்வரிசைத் தூண்கள் பட்டையாக இல்லாமல் உருண்டும் அடிமுதல் நுனிவரையில் குழைவான பட்டைகள் உடையனவாகவும் இடையிடையே கொடிப்பட்டைகளால் கட்டப்பட்டும் மிக அழகாகக் காணப் படுகின்றன.

இந்தக் குகைக்கோயிலும் முற்காலத்தில் வழிபடப்பட்டு வந்தது எனத் தோன்றுகிறது. பிற்காலத்திலே நிகழ்ந்த சைவ வைணவச்