உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

காக்கும் சக்கரவர்த்தியும், சந்திரனைப் போன்றவனும், ஆனால், நலிந்த உடம்பில்லாமல் நல்லுடம்பு பெற்றவனும் ஆகிய தருணாங்குரன் வெற்றி பெறுவானாக.

8, 9. பகை மன்னரின் ஆற்றலை அழித்தவனும் திருமகள் தங்குவதற்கு இடமாகவுள்ளவனும் காமனைப் போன்று அழகுள்ளவனும் அரனை (சிவனை) எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பவனும் ஆகிய அத்யந்தகாமனுடைய, தாமரை மலர்கள் அலரப் பெற்று நீராடுவதற்கு ஏற்ற நறுநீர்ப் பொய்கை போன்று பட்டாபிஷேக நீரினாலும் இரத்தினமணி முடியினாலும் விளங்குகின்ற திருமுடியில் சங்கரன் எழுந்தருளியிருக்கிறான்.

10. தன் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும், சங்கரனுடைய அருளைப் பெறுவதற்காகவும், தூர்ஜதி (சிவன்) எழுந்தருளும் பொருட்டு இந்தப் பெரிய தளியை அவன் அமைத்தான்.

11. தீய வழியில் ஒழுகாமல் தடுக்கிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனமுடையவர்கள் ஆறு மடங்கு சபிக்கத் தக்கவர் ஆவர். அத்யந்தகாம பல்லவேஸ்வரக் கிருகம்.

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

முகப்புப் படம் 1 பார்க்க.

கர்நாடக நவாப்புகள் காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் இக் குகையை வெடிமருந்துக் கிடங்காக உபயோகித்தார்கள் என்று தெரிகிறது.

முகப்புப் படம் 1 பார்க்க.

S. I. I. Vol. I. No. 33. Page. 29. Nos. 777, 778 Top List. Vol. III. இந்தச் செய்யுள், லிங்கானுலிங்கி, விபக்ஷம் முதலான தர்க்கப் பரிபாஷைச் சொற்களை அமைத்து இரண்டு பொருள் படும்படி சிலேடையாக அமைந்துள்ளது. இந்தச் சாசனத்தைக் கொண்டு, இக் குகைக்கோயிலை அமைத்த குணபரன் என்னும் அரசன் சமணமதத்திலிருந்து சைவமதத்திற்கு வந்து இலிங்கவழிபாடு செய்தான் என்று ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.

இதில் கூறப்படுகிற சத்தியசந்தன் என்னும் பெயர் மகேந்திரவர்மனுடைய சிறப்புப்பெயர். இந்த அரசனுடைய உருவச்சிலை இங்கு அமைக்கப்பட்டிருந்திருந்ததென்பது இச்செய்யுளினால் அறியப்படுகிறது. S.I.I. Vol. I, No. 34. Page 30.

ஸ்தானு - அழிவில்லாதவன், சிவன், ஸ்தானுவை ஸ்தானுவாக்கி என்பதற்கு அழியாப் பொருளை அழியாப் பொருளாகச் செய்து என்பது பொருள்.