உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில்கள்*

மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்துக்கட்டிடக் கலையைப் பற்றி ஆராய்வோம். கட்டிடக்கலை என்று கூறுவது கோயில் கட்டிடக்கலையையே. கி. பி. 600-க்கு முன்னே, கோயில் கட்டிடங்கள் மரத்தினாலும், செங்கல் சுண்ணாம்பு முதலியவற்றினாலும் அமைக்கப்பட்டன. கி.பி. 700 க்குப் பிறகு, கோயில் கட்டிடங்கள் கருங்கற்களினால் கற்றளிகளாகக் கட்டப்பட்டன. அஃதாவது, கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. கி. பி. 600-க்கும் 700-க்கும் இடைப்பட்ட காலத்திலே, இந்த இரண்டு வகையிலும் சேராத புதியமாதிரிக் கோயில்கள் அமைக்கப்பட்டன அவை குகைக்கோயில்களும் பாறைக்கோயில் களும் ஆகும். குகைக்கோயில் என்பது, பாறையைக் குடைந்து முன்மண்டபத்தையும் கருவறையையும் அமைப்பது. குக்ைகோயில் களை முதன்முதலாக அமைத்தவன் மாமல்லனுடைய தந்தையான முதலாம் மகேந்திரவர்மன்.

மகேந்திரவர்மனைப் பின்பற்றி அவன் மகனாக மாமல்லனும் சில குகைக்கோயில்களை அமைத்தான். அக் குகைக் கோயில், இப்போது நாம் அறிந்த வரையில், திருச்சிராப்பள்ளி மலையில் ஒன்றும், மாமல்லபுரத்தில் உள்ள மும்மூர்த்தி குகைக்கோயில், மகிஷாசுர மர்த்தினி குகைக் கோயில், வராகப்பெருமாள் மண்டபம், வராசுப் பெருமாள் குகைக்கோயில், இராமாநுசர் மண்டபம் எனப்படும் குகைக்கோயில்களும் ஆகும்.

இந்தக் குகைக்கோயில்கள் அல்லாமல், நரசிம்மவர்மன் இரதங்கள் என்று தவறாகப் பெயர் கூறப்படுகிற பாறைக் கோயில் களையும் புத்தம் புதிதாக அமைத்தான்.

நரசிம்மவர்மன் அமைத்த குகைக்கோயில்களையும் பாறைக் கோயில்களையும் இங்கு ஆராய்வோம். முதலில் குகைக்கோயில்

களைப் பார்ப்போம்.

  • வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் (1957) நூலில் இடம்பெற்ற கட்டுரை.