உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

249

செதுக்கியிருப்பதுகொண்டு அறியலாம். ஆனால் நற்காலமாக அத்தூணை எடுக்கமுடியவில்லை. பெயர்த்துக் கொண்டுபோகப் பட்ட தூண் இருந்த இடத்தில் இப்போது, ஆர்க்கியாலஜி இலாகாவால் விகாரமான ஒரு நீண்ட கல்தூண் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மண்டபத்தின் பின்புறத்தில் மூன்று கருவறைகள் உள்ளன. நடுவில் உள்ள கருவறை நன்கு அமைந்து முன்பக்கத்தில் சிறு மண்டபத்தைக் கொண்டிருக்கிறது. இந்த மண்டபத்தை இரண்டு அழகிய சிங்கத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்தச் சிங்கத் தூண்கள் பார்வைக்கு இனிய காட்சியாக இருக்கின்றன. கருவறையின் தரையில் சிவலிங்கம் இருந்த துளையொன்று காணப்படுகிறது. இந்தக் கருவறைக்கு இருபுறத்திலும் இரண்டு கருவறைகள் சற்று உள்ளடங்கியுள்ளன. இவை முற்றுப்பெறாமல் அரைகுறையாக உள்ளன. நடுகருவறையில் பின்புறச்சுவரில் சோமஸ் கந்தர் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கிறது.

முகமண்டபத்தின் தென்புற வடபுறச் சுவர்களில் பாறையைச் செதுக்கியமைக்கப்பட்ட இரண்டு சிற்ப உருவக்காட்சிகள், காண்பவரின் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து அழகிய இனிய காட்சியாக விளங்குகின்றன. இவற்றில் தெற்கிலிருப்பது அநந்தசயன மூர்த்தி; வடக்கிலிருப்பது கொற்றவையின் மகிஷாசுரப்போர். சிற்பக்கலைகளைப்பற்றி இந் நூலில் வேறு இடத்தில் காண்க.

வராகப்பெருமான் குகைக்கோயில்

இச்

மாகபலிபுரத்தில் உள்ள பல்லவர் காலத்துக் கோயில்களில் இப்போதும் வழிபாட்டில் உள்ள கோயில் இவ் வராகப்பெருமாள் குகைக்கோயில் ஒன்றே. இக் குகைக் கோயிலை இடைக்காலத்தில் வைணவர்கள் கைப்பற்றிக் கொண்டு இன்றும் வழிபாடுசெய்து வருகிறார்கள். இக் குகைக்கோயில் இருப்பது பலருக்குத் தெரியாது. வழி பாட்டில் உள்ளபடியினால், “இந்துக்களை”த் தவிர மற்றவர்கள் இதனுள் செல்வதில்லை.

இக் குகைக்கோயிலில், முதலாம் மகேந்திரவர்மன் உருவமும் அவன் தந்தையான சிம்மவிஷ்ணுவின் உருவமும் பாறைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டிருப்பதனாலே, இக் குகைக்

கோயில் சிறப்புடையது.