உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

சிற்பங்களைச் சிதைத்தல்

25

இவ்வாறு, கோயில்கள் கலைக் கூடங்களாகவும் இருந்தன என்பதை யறியாத இப்போதைய தர்மகர்த்தர்கள், பெரும்பாலும் கலைச்சுவையும் கலையறிவும் இல்லாதவர்களாகையினாலே, கோயில்களில் உள்ள கலைப் பொருள்களைக் காப்பாற்றும் பொறுப்பும் கவலையும் இல்லாதவர்களாய் அவற்றை அழித்து விடுகிறார்கள்.

3

இராஜசிம்மன் என்னும் பெயருள்ள இரண்டாம் நரசிம்மவர் மனால் காஞ்சீபுரத்திலே அமைக்கப்பட்ட இராஜசிம்மேச்சுரம் என்னும் கயிலாசநாதர் கோயில், சிற்பக்கலையில் மிகச்சிறந்தது. அந்தச் சிற்பங்கள் கோயில் சுவர்களிலே புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பட்டுள்ளன. வெயிலிலும் மழையிலும் பல நூற்றாண்டாக இருந்த படியினாலே அவற்றில் பெரும்பாலான சிதைந்து போயின. சமீப காலத்திலே அச்சிற்பங்கள் புதுப்பிக்கப் பட்டன. சிற்பக்கலை யுணராத சாதாரண சிற்பிகளாலே அவை புதுப்பிக்கப்பட்ட படியினாலே, புதுப்பிக்கப்பட்ட சிற்பங்கள், பழைய அழகு கெட்டு விகாரமாகக் காணப்படுகின்றன. ஆனால், புதுப்பிக்கப்படாத பழைய சிற்ப வுருவங்கள் இன்றும் அழகுடன் காணப்படுகின்றன.

இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் காஞ்சீபுரத்திலே அமைக்கப் பட்ட முச்சீசுரம் என்னும் முக்தீசுவரர் கோயில் முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த புடைப்புச் சிற்பமாக சிற்ப உருவங்கள் மிகச் சிறந்தவை. அவையும் இப்போது மொத்தை மொத்தையாகச் சுதை பூசப்பெற்றுப் பழைய உருவம் தெரியாதபடி விகாரப்படுத்தப் பட்டுள்ளன. பல்லவர் காலத்துக் கலையழகு நிரம்பிய சிற்ப உருவங்கள் இவ்வாறு "கொலை" செய்யப்படுகின்றன.

பழுதான சிற்பங்கள்

நமது கோயில்களிலே இப்போது உள்ள சிற்பக் கலை யுருவங்கள் யாவும் கல்லினாலும் பஞ்சலோகத்தினாலும் செய்யப் பட்டவை. பின்னம் அடைந்த சிற்ப உருவங்களையும் உடைந்து போன சிற்ப வுருவங்களையும் வழிபடக் கூடாது என்பது முறை. அதனாலே, பின்னம் அடைந்த சிற்ப உருவங்களைக் கோயில் அதிகாரிகள் அப்புறப்படுத்தி எறிந்துவிடுகிறார்கள். இது தவறு. வழிபாட்டிற்கு உதவாமற்போனாலும் அவை சிற்பக் கலை யுருவங்கள் என்னும்