உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

267

10. தன் குடிமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற் காகவும், சங்கரனுடைய அருளைப் பெறுவதற்காகவும் தூர்ஜதி (சிவன்) எழுந்தருளும் பொருட்டு இந்தப் பெரிய தளியை அவன் அமைத்தான்.

11. தீய வழியில் ஒழுகாமல் தடுக்கிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனமுடையவர்கள் ஆறுமடங்கு சபிக்கத்தக்கவர் ஆவார்கள். அத்யந்தகாம பல்லவேசுவரக் கிருகம்.9

66

வலயன் குட்டை இரதம்

இது மகாபலிபுரத்து ஊருக்கு அருகே, பக்கிங்காம் கால்வாய்க்கு கிழக்குப் பக்கத்தில் (பாலத்துக்கு அருகில்) இருக்கிறது. வலயன் குட்டை என்னும் குட்டைக்கு அருகில் இருப்பதனால் இதற்கு இப் பெயர் வழங்குகிறது.

66

இரதங்கள்” என்று கூறப்படுகிற மற்றப் பாறைக் கோயில் களைப் போலவே இதுவும் ஒரே பாறையில் அமைக்கப்பட்ட கோயில் இதனையும் இதற்கு அடுத்துள்ள “பிடாரி இரதங் களையும் மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் காண வருகிறவர்கள் பெரும்பாலோர் பார்ப்பதில்லை. காரணம், இவை தனியே ஒருபுறமாக ஒதுங்கியிருப்பது

தான்.

வலயன் குட்டைப் பாறைக்கோயிலின் அடிப்புறமும் கருவறையும் நன்கு அமைக்கப்படாமல் வெறும் பாறையாகவே விடப்பட்டிருக்கின்றன. இக் கோயிலின் மேற்பகுதிகள் மட்டும் செம்மையாகவும் ஒழுங்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலின் மேற்புற அமைப்பை மட்டும் காட்டுதற்காக இப் பாறைக்கோயில் அமைக்கப்பட்டதென்பது நன்கு தெரிகிறது.

கிழக்கு நோக்கியுள்ள இந்தப் பாறைக்கோயில், அர்த்த மண்டபமுடையது. ஆனால், மேலே கூறியபடி அர்த்த மண்டபம், கருவறை முதலிய பகுதிகள் இதில் நன்கு அமைக்கப்படவில்லை. மேல்பகுதிகளாகிய மஞ்சமும் கழுத்தும் விமானமும் செம்மையாகவும் ஒழுங்காகவும் அமைந்து கண்ணுக்கினிய காட்சியாக இருக்கிறது.

இது இளங்கோயிலின் மற்றொரு அமைப்பு, திரௌபதை இரதம் என்னும் இளங்கோயிலின் விமான அமைப்பு நான்கு பட்டையுள்ள தென்பதை முன்னமே அறிந்தோம். அதே அறிந்தோம். அதே இளங்கோயில்