உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 12

-

கிளியனூர்

இவன் காலத்தில் அமைக்கப்பட்ட மற்றொரு கோயில், திகைத்திறல் விஷ்ணுக் கிருகம் என்பது. இதற்கு இப்போது வைகுண்டவாசப் பெருமாள் கோயில் என்று பெயர் கூறப்படுகிறது. இது, தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா கிளியனூரில் இருக்கிறது. "ஒய்மா நாட்டுக் கிளிஞலூர் திகைத்திறல் விஷ்ணுக் கிருகம்” என்று சாசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. திகைத்திறலார் என்பவர் இக்கோயிலை அமைத்து. நிலபுலங்களைத் தானம் செய்தார் என்று சாசனம் கூறுகிறது.

படுவூர்

இவ்வூர், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகாவைச் சேர்ந்தது. ஆமூர் கோட்டத்துப் படுவூர்நாட்டுப் படுவூர் என்பது இவ்வூரின் பழைய முகவரி. இவ்வூர் குளத்து மேட்டின்மேல் ஐந்தடி உயரம் உள்ள பெருமாள் உருவம் நின்று கொண்டி ருக்கிறது. கோயில் முழுவதும் அழிந்துவிட்டது. இவ்வூர் மேட்டுத் தெருவில் உள்ள ஒருகல் எழுத்துச் சாசனம், இந்தப் பெருமாளின் பெயரைக் கூறுகிறது. "விழுப்பெருந்தாய் விஷ்ணுக்கிருகத்து நின்றருளிய பெருமாள்” என்று அந்தச் சாசனம் கூறுகிறது. எனவே, விழுப்பெருந்தாயன், என்பவன் நின்றருளிய பெருமாள் கோயிலைக் கட்டினான் என்பது தெரிகிறது. மேலும், இந்தக் கோயில் தெள்ளா தெள்ளா றெறிந்த நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட தென்று மேற்படி சாசனத்தினால் தெரிகிறது இந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய விழுப் பெருந்தாயன் என்பவர், மூன்றாம் நந்திவர்ம னின் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் போலும். இந்தக் கோயில் முழுவதும் மறைந்து விட்டபோதிலும், பெருமாளின் திருவுருவம் இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வுருவத் தை இந்நூலின் தொடக்கத்தில் காண்க.

நின்றருதுளிய பெருமாள்