உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

289

அங்குலம். இதில் இருந்த தாதுகம்பத்தின் அடிப்புறம் மட்டும் காணப்படுகிறது. இதன் சுற்றளவு. 9 அடி 9 அங்குலம்.

4-ஆவது யானைக்கோயில் : இதன் நீளம் 33 அடி 5 அங்குலம். அகலம் 11 அடி 6 அங்குலம். சுவர் கனம் 4 அடி 9 அங்குலம். இதிலும் கருங்கல்லினால் அமைந்த சேதியம் காணப்படுகிறது.

5-ஆவது யானைக்கோயில் : இதன் நீளம் 30 அடி. அகலம் 13 அடி 6 அங்குலம். சுவர் கனம் 3 அடி 6 அங்குலம். (Plate x L. Page 79. Buddhist Monastries in the Guru Bhakta Konda and Durga Konda Hills of Rama Tirtham by A. Roa. PP. 78-88. Archacological Survey of India Annual Report 1910-1911)

குருபக்த கொண்டாவுக்கு வடக்கே கால் மைலுக்கப்பால் துர்க்ககொண்ட என்னும் குன்று இருக்கிறது. இங்கு அழிந்து கிடக்கும் பௌத்தக்கட்டடங்களில் ஒன்று யானைக்கோவில். இதன் நீளம் 60 அடி, அகலம் 13 அடி. (Plate XLVI. Do Do Do P. 86)

சாஞ்சி என்னும் இடம் போபால் சமஸ்தானத்தில் இருக்கிறது. சாஞ்சியின் பழையபெயர் சேதியகிரி என்பது. சேதியகிரி என்பது சிதைந்து சாஞ்சி என்று கூறப்படுகிறது. இங்குப் பௌத்தக் கட்டடங்கள் சிதைந்து இடிந்து உள்ளன. இவற்றில் மூக்கியமான கட்டடம் புப்புலாகாரமாக அதாவது நீர்க்குமிழிபோன்ற அமைப்புடையது. இங்குள்ள ஒரு கட்டடம் யானைக்கோயில் அமைப்பாக இருந்தது. (Plate 47. Fergusion)

முழு

இதுகாறும் இடிந்து சிதைந்து அழிந்துபோன யானைக் கோயில் களின் செங்கற்கட்டடங்களின் தரையமைப்பைக் கண்டோம். யானைக் கோவிலின் செங்கற்கட்டடங்களை முழு உருவத்துடன் பார்க்க வில்லை. பௌத்தக் காலத்து யானைக்கோவில்களின் உருவமுள்ள யானைக்கோவில்கள் உண்டா என்பதைப் பார்ப்போம். ஆம் உண்டு. சிறிதும் சிதையாமல், முழு உருவத்தோடு உள்ள, செங்கற்களால் கட்டப்பட்ட பௌத்தக் காலத்து யானைக்கோயில்கள் மூன்று இருக்கின்றன. அந்த மூன்று யானைக் கோவில்கள் இப்போது கபோதேசுவரர் கோவில் என்றும், திரிவிக்ரமன் கோவில் என்றும் தூங்காளைமாடம் என்றும் பெயர் பெற்றுள்ளன. இந்தப் பௌத்த காலத்து யானைக்கோவில்களைப் பார்த்து, ஆதிகாலத்தில் எவ்வாறு யானைக்கோயில்கள் செங்கற்களால் அமைக்கப்பட்டன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.