உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

297

இந்த நோக்கத்தைக் கொண்டுதான், அதாவது கோவில் கட்டடத்தின் விமானத்தையும் சுவர் அமைப்பு கூடகோஷ்ட பஞ்சர அமைப்பு ஆகியவற்றைமட்டும் (கர்ப்பகிரகமாகிய உண்ணாழி கையின் அமைப்பைக் காட்டுவது நோக்கமாக இல்லாமல்) கொண்டுதான். 'நகுலசகாதேவரதம்” என்று பெயர் கூறப்படுகிற யானைக் கோவிலையும் அமைத்திருக்கிறார்கள். இது வெறும் யானைக்கோவில் அமைப்புமட்டுமன்று, யானைக்கோவில் மாடக் கோவில் அமைப்பும் ஆகும். இந்த யானைக் கோவில் மூன்று நிலையுள்ள மாடக் கோவிலாகும்.

கி.பி. 600-க்கு முற்பட்ட “பௌத்தர்காலத்துயானைக் கோவில் கட்டிடங்களில் இரண்டு நிலைமாடக் கோவில் மூன்று நிலைமாடக் கோவில்கள் காணப்படவில்லை. ஆனால், மூன்று நிலையுள்ள மாடக் கோவிலாக அமைந்த யானைக் கோவில் மாமல்லபுரத்தில் காண்கிறோம். இது மாடக் கோவில் கட்டிடங்களின் புதிதாகப் புகுத்தப்பட்ட மாறுதல் ஆகும். இரண்டுநிலை மூன்று நிலைகளை யுடைய யானைக் கோவில்களைக் காமிகாகமம் கூறுகின்றது.' என்றும் சாமிகாகமம் பெயர்கூறுகின்றது (காமிகாகமம் 60 ஆவது ஏகபூமியாதி விதிபடலம்) ஆனால் இரண்டு நிலை மாடமாக அமைந்த யானைக் கோவில் கட்டிடம் இப்போது காணக்கிடைக்கவில்லை. முன்பு இருந்து பிற்காலத்தில் மறைந்து விட்டனபோலும். ஆனால், மூன்று நிலைமாடமாக அமைந்த யானைக்கோவில் மாமல்லபுரத்து நகுலசகாதேவஇரதம்' ஒன்றே. யானைக் கோவில் அமைப்பில் உள்ள மூன்று நிலைமாடக் கோவில் இதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

இதன் அமைப்பை ஆராய்ந்துபார்ப்போம். நீண்ட அரை வட்டமாக அமைந்துள்ள இந்த யானைக் கோவில் தெற்கு நோக்கி நிற்கிறது. தெற்கு வடக்காக இதன் நீளம் 18 அடி அகலம் 11 அடி, உயரம் ஏறத்தாழ 16 அடி. இக்கட்டிடத்தின் முன் பாகத்தில் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அந்த மண்டபத்தை இரண்டு சிங்கத்தூண்கள் தாங்குகின்றன. இந்தமண்டபம் இக்கட்டிடத்துக்கு அழகை கயளிக் கின்றது. மண்டபத்துக்குள் நுழைந்தால் கட்டிடத்தின் உள்ளே நுழைய வாயில் நிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாயிலுக்குள் நுழையமுடியாது. ஏனென்றால், முன்பு கூறியது போன்று திருவுண் ணாழிகை என்னும் அகநாழிகை (கருவறை) அமைக்கப்படாமல் இருக்கிறது. வாயிலின் இருபக்கங்களிலும் யானையின் முன்பக்க உருவம் (யானையின் தும்பிக்கையும் தலையும் காதுகளும்) சிற்பமாக அமைந்துள்ளன.