உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறுகள் மிகவும் முதன்மையாகும். ஆனால், வரலாற்று நூல்களை எழுதும் வழக்கம் நம் நாட்டிலே பண்டைக் காலத்தில் இருந்ததில்லை. ஆகவே நமது நாட்டுப் பழைய வரலாறுகள் நமக்குக் கிடைக்க வில்லை. முஸ்லீம்களும், ஐரோப்பியரும் வரலாற்று நூல் எழுதும் வழக்கமுடையவராயிருந்தனர். ஐரோப்பியர் நமது நாட்டிற்கு வந்த பின்னரே, வரலாறு எழுதும் வழக்கம் நமக்கு ஏற்பட்டது.

அண்மைக்காலத்திலே மேல்நாடுகளில் ஆர்க்கியாலஜி, எபிகிராபி' சாத்திரங்களில் மூல மாக வரலாற்று ஆராய்ச்சி முறை பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த நூல்களின் மூலமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மறைந்துபோன எகிப்தியர், பாபி லோனியர், யவனர் (கிரேக்கர்), உரோமர் முதலான பழங்கால மக்களின் வரலாறுகளும் நாகரிகங்களும் இப்போது கண்டறியப் பட்டுள்ளன.

நமது நாட்டிலிருந்த ஆங்கிலேய ஆட்சியினர், ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாகாக்களை நமதுநாட்டிலும் ஏற்படுத்தி அவற்றின் மூலமாக மறைந்துபோன பழஞ்செய்திகளையும் நாகரிகங்களையும் வரலாறுகளையும் கண்டறிய வழிசெய்தனர். இதனால் மொகஞ்சதாரோ, ஹரப்பா, நாகார்ச்சுனகொண்ட, நாலாந்தா, பாடலிபுரம் (இராசக்கிருகம்) முதலிய பல அழிந்து மறைந்துபோன நகரங்களின் நாகரிகங்களும் வரலாறுகளும் கண்டறியப்பட்டன. அசோகச் சக்கரவர்த்தியின் பிராமி எழுத்துச் சாசனங்களும், ஏனைய அரசர்களின் கல்வெட்டெழுத்துக் களும், செப்பேட்டுச் சாசனங்களும் கண்டறியப்பட்டு, அவற்றின் உதவியினாலே இந்திய நாட்டின் பழைய கலை, நாகரிகம், வரலாறு முதலிய செய்திகளை அறிய முடிந்தது.

நந்தமிழ் நாட்டிலேயும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மறைந்து மறந்துபோன சேர சோழ பாண்டியர் முதலிய அரசர்களின் வரலாறுகளும், நாகரிகங்களும், செய்திகளும், ஆர்க்கியாலாஜி எபிகிராபி ஆராய்ச்சியின் பயனாக, இப்போது நாம் அறிந்து கொள்ள