உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

மகாபலிபுரம் என்று வழங்குகிற மாமல்லபுரம் இக்காலத்தில் உலகமெங்கும் பேர்பெற்ற ஊராகும். உலகத்தின் நானா திசை களிலிருந்து தமிழ் நாட்டிற்கு வருகிறவர், மாமல்லபுரத்திற்குவந்து இங்குள்ள சிற்பக்கலைகளைக் கண்டு இன்புறுகிறார்கள். அரசியல் தலைவர்களும், கலைவாணர்களும், காவியப்புலவரும், ஒவியக் கலைஞரும், பாவலரும், நாவலரும், பண்டிதரும் பாமரரும் மாமல்ல புரம் சென்று குகைக்கோயில்களையும் பாறைக்கோயில் களையும் கற்றளிகளையும் அழகிய சிற்பங்களையும் கண்டு செல்கின்றனர். இந்தச் சிற்பங்களை அமைத்தவன் மாமல்லன் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன்.

தொண்டை

காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக்கொண்டு நாட்டையும் சோழநாட்டையும் ஒரு குடைக்கீழ் வைத்து அரசாண்ட பல்லவ மன்னர்களில், மகேந்திரவர்மனுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்றவன், நரசிம்மவர்மன். நரசிம்மவர்மனுடைய இயற் பெயர் மாமல்லன் என்பது. மாமல்லன், பல்லவரின் துறைமுகப்பட்டினத் துக்குத் தன் பெயரைச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். தன் பெயரைச் சூட்டியதல்லாமல், இப்பட்டினத்திலிருந்த பாறைக் குன்றுகளைக் கலைக்கோயில்களாக அமைத்து அழகு படுத்தினான். பல்லவர் காலத்தில் பெரிய துறைமுகப் பட்டினமாயிருந்த மாமல்ல புரம், இப்போது பெருமை குன்றி சிறு கிராமமாக இருக்கிறது. மாமல்ல புரம் என்னும் பெயர் திரிந்து மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது.

மாமல்லன் நரசிம்மவர்மன் புகழ்பெற்ற சிறந்த மன்னன். இவ்வரசன் படையெடுத்துவந்த சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியைப் போர்க்களத்தில் வென்றதோடு அமையாமல், புலிகேசியின் தலைநகரமான வாதாபிநகரத்தின்மேல் படை யெடுத்துச் சென்று அந்நகரத்தைப் பிடித்து, அங்கு வெற்றிக்கம்பம் நாட்டினான். இதனால் இவனுக்கு, 'வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன்' என்னும்