உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

முதன்மைபெற்றுப் பல்லவ அரசரை வீழ்த்திய பிறகு, பல்லவ அரசர் வரலாறு முழுவதும் மறக்கப்பட்டு மறைந்துகிடந்து. கர்ணபரம் பரையாகவும் இலக்கிய நூல்கள் வாயிலாகவும் சிறிதளவாவது சேர சோழ பாண்டியர்களின் பெயர் அறியப்பட்டது போன்ற அளவு கூட பல்லவ அரசரின் பெயர் அறியப்படாமல் முழுவதும் மறைந்துகிடந்தது.

தமிழ்நாட்டிலும் பாரத தேசத்திலும் ஆதிகாலம் முதல் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்ததில்லை. ஆங்கிலேயர் தொடர்பு ஏற்பட்ட பின்னரே, சரித்திரமும் வரலாறும் எழுதும்முறை கற்பிக்கப் பட்டது என்பதை நாம் நேர்மையோடு ஒப்புக்கொள்ளவேண்டும். நமது நாட்டை அரசாண்ட ஆங்கிலேயர் நமது நாட்டு வரலாற்றை அறிய விரும்பினார்கள். சரித்திர நூல்கள் இல்லாததை அறிந்தார்கள். சரித்திரச் செய்திகளைச் சிறிதளவு கொண்டுள்ள கல்வெட்டுச் சாசனங்களும் செப்பேட்டுச் சாசனங்களும் பற்பல இடங்களில் வெவ்வேறு ஊர்களில் சிதறிக்கிடந்து மறைந்து ஒளிந்து இருளடைந் திருந்தன. அம்மட்டோ? பழைய எழுத்துக்கள் மறைந்து புதிய எழுத்துக்கள் தோன்றிவிட்டபடியால், பழைய கல்வெட் டெழுத்துக்களும் செப்பேட்டு எழுத்துக்களும் மறக்கப்பட்டுப் படிக்க முடியாமற்போயின. இவ்வாறு வரலாற்றுச் செய்திகள் இருளடைந்து கிடந்த காலத்தில், சென்ற 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே, ஆங்கில அரசாங்கத்தார் ஆர்க்கியாலஜி என்னும் பழம்பொருளா ராய்ச்சித் துறையையும், எபிகராபி என்னும் சாசன ஆராய்ச்சித் துறையையும் ஏற்படுத்திச் சிதறிக்கிடந்த சாசனங்களைத் தொகுத்துப் படிக்கமுடியாமற்கிடந்த சாசனங்களைப் படித்து அவற்றை இக் காலத்து எழுத்துக்களில் எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். இதனாலே நமது நாட்டுப் பழைய வரலாறுகளும் சரித்திரங்களும் சிறிதளவாவது வெளிப்படலாயின. இவ்வாறு நமக்குக் கிடைத்த வரலாறுகளை ஏனைய சான்றுகளுடன் ஒத்திட்டு ஆராய்ந்து பார்த்து, நமது நாட்டைப் பொறுத்த வரையில், சேர சோழ பாண்டியர் சிற்றரசர் வரலாறுகளையும் அக்காலத்து நாகரிகம் வாழ்க்கை முதலியவற்றைப் பற்றியும் இப்போது தெரிந்துகொள்கிறோம். ஆயினும் இந்தச் சாசனங்கள், வரலாற்றை ஓரளவுதான் அறிவிக்கின்றனரேவயன்றி முழு வரலாற்றையும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், அவை எழுதப்பட்ட தன் நோக்கம் வரலாற்றைத் தெரிவிப்பதற்கன்று. எனினும், இந்த அளவாகிலும் பழைய வரலாற்றை அறிய முடிகிறதே என்று நினைக்கும் போது சிறிது ஆறுதல் ஏற்படுகிறது.