உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

"மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க

என்றும் “மணிமேகலை” கூறுகிறது2

நமது

கோயில்களிலே

சிற்பக்கலை பெரிதும்

இடம் பெற்றிருக்கிறது. சிற்ப உருவங்கள் அமையாத கோயில் கட்டிடங்கள் இல்லை என்றே கூறலாம். கோயிலின் தரை, சுவர், சிகரம், கோபுரம், மண்டபம், தூண்கள், வாயில் நிலைகள் முதலிய கட்டிடங்களின் எல்லா டங்களிலும் சிற்ப உருவங்கள் அமைந்துள்ளன.

காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த மாளிகைகளிலே, சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்ததை, இந்திர விழாவின்போது அந் நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனர் என்று மணிமேகலை என்னும் நூல் கூறுகிறது. அப்பகுதி இது:

“வம்ப மாக்கள் கம்பலை மூதூர்

சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா

எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி

வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்3

இரண்டு வகை சிற்பம்

4

சிற்ப உருவங்களை முழு உருவங்கள் என்றும் புடைப்புச் சிற்பம் என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் என்பது, பொருள்களின் முன் புறம் பின்புறம் முதலிய முழு உருவமும் தெரிய அமைக்கப் படுவது. புடைப்புச் சிற்பம் என்பது, பொருள்களின் ஒருபுறம் மட்டும் தெரியும்படி சுவர்களிலும் பலகைகளிலும் அமைக்கப்படுவது. இவ் விரண்டுவித சிற்ப உருவங்களும் கோயில்களிலே அமைக்கப்படுகின்றன.

Լ

தத்ரூப உருவங்கள்

தமிழ்நாட்டுச் சிற்பக்கலை, பாரத நாட்டுச் சிற்பக்கலையைப் போலவே, சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆகவே, தெய்வ உருவங்கள் நமது நாட்டுச் சிற்பக் கலையில் பெரிதும் முதன்மை பெற்றுள்ளன. கிரேக்க தேசம்,