உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

49

பிரதிமை உருவங்கள் என்பவை ஒரு ஆளின் உருவத்தைத்

தத்ரூபமாக அமைப்பது.

இந்த நான்குவிதமான சிற்பங்களை நமது நாட்டுக் கோயில்களில் உதாரணத்திற்காக இச்சிற்பங்களில்

காணலாம்.

இங்குக்காட்டுவோம்.

சிலவற்றை

அவற்றையெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவதற்கு இது இடம் அன்று ஆயினும், சுருக்கமாகச் சில கூறுவோம்.

தெய்வ உருவங்கள்

தெய்வ உருவங்களில் சைவ சமயச் சிற்ப உருவங்களைக் கூறுவோம். சிவபெருமானுக்கு முக்கியமாக இருபத்தைந்து மூர்த்தங்களைக் கூறுவார்கள். அந்த மூர்த்தங்களைக் கல்லிலும் செம்பிலும் அழகாகச் சிற்பிகள் செய்திருக்கிறார்கள். அவையாவன:-

1. இலிங்கோத்பவ மூர்த்தம் 2. சுகாசன மூர்த்தம், 3. உமாமகேசம், 4. கலியாணசுந்தரம் 5. மாதொருபாகர் (அர்த்தநாரி) 6. சோமஸ்காந்தம், 7. சக்கரப்பிரசாதன மூர்த்தம் 8. திரிமூர்த்தி, 9. அரியரமூர்த்தம், 10. தக்ஷணாமூர்த்தம், 11. பிக்ஷாடனர், 12. கங்காளமூர்த்தி, 13. கால சம்மாரமூர்த்தி, 14. காமாந்தகர், 15. சலந்தர சம்மாரமூர்த்தி, 16. திரிபுராந்தகர், 17. சரபமூர்த்தி, 18, நீலகண்டர், 19. திரிபாதமூர்த்தி, 20. ஏகபாதமூர்த்தி, 21. பைரவமூர்த்தி, 22. இடபாரூடமூர்த்தி, 23. சந்திரசேகரமூர்த்தி, 24. நடராஜமூர்த்தி, 25, கங்காதரமூர்த்தி.

இவற்றில், தக்ஷணாமூர்த்தி வுருவத்தில் வீணாதரதக்ஷணா மூர்த்தி என்றும் ஞான தக்ஷணாமூர்த்தி என்றும் யோக தக்ஷணா மூர்த்தி என்றும் பிரிவுகள் உள்ளன.

நடராஜ மூர்த்தத்தில், சந்தியாதாண்டவ மூர்த்தி, காளிகா தாண்டவமூர்த்தி, புஜங்கத்திராசமூர்த்தி, புஜங்களிதமூர்த்தி, ஊர்த்துவ தாண்டவமூர்த்தி முதலிய பிரிவுகள் உள்ளன.

பைரவ மூர்த்தத்தில் பிக்ஷாடன பைரவர், லோக பைரவர் காளபைரவர், உக்கிரபைரவர் முதலிய பிரிவுகள் உள்ளன.

அம்பிகை, துர்க்கை, காளி, பைரவி முதலிய உருவங்களும்

உள்ளன.

கணபதி உருவத்தில், பாலகணபதி, நிருத்த கணபதி, மகா கணபதி, வல்லபை கணபதி முதலிய பலவகையுண்டு.