உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

கூடச் செய்த ஒன்பத்திற்று விரற் சமசதுரத்து ஐய்விரலே இரண்டு தோரை உசரத்து பீடம் ஒன்று.

9911

இச்சாசனத்தில் கூறப்படுகிற பெரிய பெருமாள் என்பது இராஜராஜ சோழரைக் குறிக்கிறது. ஒலோகமா தேவியார் என்பது இராஜராஜனுடைய அரசியின் பெயர்.

திருக்காளத்திக் கோயிலில் இருந்த மூன்றாங் குலோத்துங்கன் பிரதிமை யுருவம், செப்பினால் செய்யப்பட்டது. இது இவ்வரசன் இளைஞனாக இருந்தபோது செய்த பிரதிமை யுருவம். இவ்வரச னுடைய மற்றொரு பிரதிமை யுருவம் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் உள்ள கோபுரத்துக்கு அருகில் இருக்கிறது. இது கற்சிலை யால் செய்யப்பட்டது. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருந்த இவ்வரசனுடைய சுதை யுருவம் இப்போது அழிந்துவிட்டது.

வேறு பிரதிமைகள்

விஜயநகரத்து அரசர் கிருஷ்ண தேவராயரின் செப்புப் பிரதிமை யுருவம் திருப்பதி கோயிலில் இருக்கிறது. இவருடைய கற்சிலைப் பிரதிமை யுருவம் சிதம்பரம் கோயிலில் இருக்கிறது. தஞ்சாவூர், மதுரை இவ்விடங்களில் அரசாண்ட நாயக்க மன்னர்களின் பிரதிமை யுருவங்களும், கம்பநாடர், அப்பைய தீக்ஷிதர் முதலியவர்ளின் பிரதிமை யுருவங்களும் தமிழ் நாட்டு வெவ்வேறு கோயில்களில் காணப்படுகின்றன. தென்னாட்டுப் பிரதிமை யுருவங்களைப்பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால், அவையும் விரிவாகக் கூற வில்லை. தமிழ் நாட்டுப் பிரதிமையுருவங்களைப் பற்றித் தமிழிலே விரிவாக ஒரு நூலேனும் இதுவரையில் எழுதப்படாதது வருந்தத்தக்கது.

அலங்காரம் ஏன்?

கோயில்களிலே வணங்கப்படும் சிற்ப உருவங்களைப் பற்றி ஒரு செய்தி கூற வேண்டும். கல் சிற்ப உருவங்களும் செம்பு சிற்ப உருவங்களும் ஆன தெய்வத் திருவுருவங்களுக்கு வேஷ்டி, சேலை முதலிய துணிகளை யுடுத்தி வருகிறார்கள். இது அநாவசியமானதும் தவறானதும் ஆகும். வேஷ்டி சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச் சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்து இருக்கிறார்கள். சிற்பிகள் அவ்வுருவங்களை நிர்வாணமாக