உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கலையில் தாமரை*

நமது நாட்டுப் பூக்களில் தாமரைப் பூவே தலை சிறந்தது. தாமரைப் பூவில் அழகு மட்டும் அல்ல; தெய்வத் தன்மையும் அமைந்திருக்கிறது. தாமரைப் பூவைக் கண்டு மகிழாத மக்கள் இலர். தாமரையைப் பாடாத புலவர் உளரோ? தாமரையை எழுதாத ஓவியர் உளரோ? தாமரையைச் சிற்பத்தில் அமைக்காத சிற்பிகள் உளரோ? காவியத்திலும் ஓவியத்திலும் தாமரை தனியிடம் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டிலே கோவில்களுக்குக் குறைவில்லை. கோவில் கட்டடங்களிலே சிற்பக்கலைகள் சிறந்து விளங்குகின்றன. கோயில் களை அமைத்த சிற்பக் கலைஞர், கோயிற் சுவர்களிலும் தூண்களிலும் பல விதமான சிற்ப உருவங்களை அழகாக அமைத்திருக்கிறார்கள். கலைச்சுவை அறிந்தோர் அக் கலைச் சிற்பங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்கிறார்கள். சிற்பிகள் கோவில்களிலே கற்களைச் செதுக்கி அமைத்த கலையுருவங்களிலே தாமரைப் பூவும் பெற்றிருக்கிறது.

இடம்

நாட்டு வளத்தைப் பாடும்போதெல்லாம் காவியப் புலவர் தாமரைக் குளத்தைப் பாடாமலிரார். வெண்டாமரை செந்தாமரை நீலத்தாமரைகளையும், வெள்ளல்லி, செவ்வல்லி கருங்குவளை ஆம்பல் செங்கழும் முதலிய நீர்ப்பூக்களையும் அழகாகப் பாடுவார்கள். தாமரைக் குளத்திலே இருக்கிற கொக்கு, அன்னம் முதலிய பறவைகளையும் தாமரைப் பூக்களில் மொய்க்கும் வண்டுகளையும் பாடுவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் குகைக் கோயிலிலே ஓவியப்புலவன் அழகாக எழுதியமைத்த தாமரைக் குளத்து ஓவியத்தை கண்டு மகிழாதவர் யார்?

தேவர்.

66

“சாந்துநீர் நிறைந்த வாவி

தயங்கு செங் குவளை வாவி பூச்சதுகள் அவிழ்ந்த பொற்றா

மரைமலர் புனைந்த வாவி”

என்று சொல் ஓவியமாக எழுதிக் காட்டுகிறார் தோலாமொழித்