உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சைவ வைணவ பௌத்த சமண

சிற்பங்கள்*

சிற்ப உருவங்களின் அமைப்பு

நமது நாட்டிலே சைவம் வைணவம் பௌத்தம் சமணம் என்னும் நான்கு மதங்களும் தொன்றுதொட்டுள்ள பழைய மதங்களாகும். இந்த நான்கு சமயத்தாரும் தத்தமக்கென்று கோயில்கள் அமைத்து அக் கோயில்களில் தத்தம் தெய்வ உருவங்களைச் சிற்பத்திலும் ஓவியத்திலும் அமைத்து வணங்கினார்கள். இந்தத் தெய்வங்களின் உருவ அமைப்பிலே சிறப்பாகச் சில வேறுபாடுகள் உண்டு. சிற்பக் கலைகளை ஆராய்வோர் அந்த வேறுபாடுகளை அறிய வேண்டும். இந்த நான்கு சமயங்களில், சைவ வைணவ சமயங்கள் ஒருவகையில் ஒத்த தன்மையுடையன; பௌத்த சமண சமயங்கள் ஒரு சார்புடையன. மற்றொரு வகையில், சைவ சமண சமயமும் வைணவ பௌத்த சமயமும் ஒற்றுமையுடையன. இக்காலத்தில் நமது நாட்டில் சிறப்பாக உள்ள சமயங்கள் சைவமும் வைணவமுமே, பௌத்த மதம் அடியோடு மறைந்து போயிற்று; போயிற்று; சமண சமயம் (ஜைன மதம்) குன்றிக் குறைந்துவிட்டது. ஆயினும், ஆ பௌத்த ஜைன சமயத்து உருவச்சிலைகளையும் சிற்ப உருவங்களையும் நமது நாட்டில் ஆங்காங்கே கண்டு வருகிறோம்.

சைவ சமயத்தின் முதல் தெய்வமாகிய சிவபெருமான் திருவுருவம் நின்ற வண்ணமாகவும் இருந்த (அமர்ந்த) வண்ண மாகவும் அமைக்கப்படுகிறது. கிடந்த (படுத்த) வண்ணமாக அமைக்கப்படுவது இல்லை. அதுபோலவே சமண (ஜைன) சமயத்தின் தெய்வமாகிய அருகப்பெருமான் திருவுருவமும் நின்ற

  • கழக 1008 நூல் வெளியீட்டு விழா மலர். 1961.