உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

63

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஊரில் சில செம்புச் சிற்ப உருவங்கள் பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவை நடராஜர் சிவகாம சுந்தரி, இராமர் இலக்குமணர் சீதாலக்ஷ்மி என்னும் உருவங்களாகும் இந்த அழகான செம்பு உருவங்களை ஒரு கோவிலில் வைத்து வணங்குகிறார்களாம். வைத்தவர்கள் நடராஜர் பக்கத்தில் சீதை உருவத்தையும் இராமர் பக்கத்தில் சிவகாமியின் உருவத்தையும் மாற்றிவைத் திருக்கிறார்களாம்! நடராசரின் தாண்ட வத்தைக் கண்டு மகிழவேண்டிய சிவகாமி இராமன் பக்கத்தில் சீதையின் இடத்திலிருப்பதும், இராமர் பக்கத்தில் இருக்க வேண்டிய சீதை நடராசர் பக்கத்தில் இருப்பதும் எதைக் காட்டு கின்றன? சீதையின் உருவத்துக்கும் சிவகாமியின் உருவத்துக்கும் வேறுபாடு அறியாதபடி சிற்பக்கலை அறிவு மழுங்கிப் போய் விட்டதைக் காட்டுகிறதல்லவா?

சிற்பக்கலை சிறந்த அழகுக் கலை; அழகிய நுண்கலை. ஏனைய அழகுக்கலைகள் உள்ளத்திற்கு உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டுவதுபோலவே இந்தச் சிற்பக்கலையும் உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. சிற்பக் கலையை நாம் கைவிடுவது பேதைமைத்தனமாகும். இந்தக் கலைச் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். எத்தனையோ இடங்களில் எத்தனையோ சிற்ப உருவங்களைக் காண்கிறோம். எல்லாச் சிற்பங்களும் கலையழகு நிரம்பியவை என்று கூறமுடியாது. கலையழகுள்ளவற்றையும் அல்லாதவற்றையும் ஆராய்ந்து

அறியவேண்டும்.

6

அடிக்குறிப்புகள்

1. கழக 1008 நூல் வெளியீட்டு விழா மலர் 1961

2.

மிகப் பழைமையான சிவபெருமான் திருமால் திருவுருவங்களுக்கு, மிக அரிதாக இரண்டு திருக்கைகள் மட்டும் உள்ளன. அவை விதிவிலக்கானவை.