உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சக்கராயுதத்தை யுடைய மாயோனுக்கு (விஷ்ணுவுக்கு) நிலம் காலாகவும், கடல் உடையாகவும், ஆகாயம் உடம்பாகவும், திசைகள் கைகளாகவும், சூரியனும் சந்திரனும் கண்களாகவும் அமைந்துள்ளன என்பதை இச்செய்யுளிலிருந்து அறிகிறோம்.

திசைகள் நான்கே அன்றி இரண்டு அல்ல. ஆகவேதான், திசைகளைக் கையாகவுடைய உருவத்துக்கு நான்கு கைகள் கற்பிக்கப் பட்டன. திசையை எட்டாகவும் பதினாறாகவும் கொள்ளும்போது. எட்டு, பதினாறு கைகள் அமைக்கப்படுகின்றன.

சிவனுடைய உருவமும் இவ்வாறுதான் கற்பிக்கப்பட்டது. இதற்கு அந்த மத நூல்களில் சான்றுகள் உள்ளன. சிவனுக்கு ஆகாயமே உடம்பாய் இருக்கிறது என்று சைவநூல்கள் கூறுகின்றன. "ஆகாசமே உடல்” என்று 'திருமந்திரமும்', “விசும்பே உடம்பு" என்று 'பொன் வண்ணத்தந்தாதியும்' 'விசும்பே 'விசும்பே ஆகம் கம்" என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடலும் கூறியுள்ளன.

66

ஆகாயத்தை உடம்பாகக் கொண்டுள்ள சிவபெருமான் திசைகளாக நான்கு அல்லது எட்டுக் கைகளைக் கொண்டிருக் கிறார் என்று கூறப்படுகிறது. 'திசைகள் எட்டும் திருக்கைகள் என்று ‘திருமந்திர’மும் “திசை தோள்” என்று ‘பொன்வண்ணத் தந்தாதி'யும், 'எண்திசை எண்தோள்” என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடலும் கூறியுள்ளன. “பத்துத் திசைகளும் பத்துக் கைகள்” என்று ‘காமி காகமம்' என்னும் சைவாகமம் கூறுகின்றது, (எட்டுத்திசைகளுடன் மேல்கீழ் என்னும் இரண்டு திசைகளையும் சேர்த்துப் பத்து என்று கூறுகிறது.)

சிவபெருமானுக்கு மூன்று கண்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. சூரியன் சந்திரன் அக்கினி என்னும் மூன்றும் சிவபெருமானின் கண்களாகக் கற்பிக்கப்பட்டன. “மோகாக முக்கண் மூன்றொளி” என்பது திருமந்திர வாசகம். சூரிய சோம அக்கினி சிவபெருமானின் மூன்று கண்கள் என்றும், இச்சா சத்தி கிரியா சத்தி ஞானா சத்தி என்னும் மூன்று சக்திகள் சிவபெருமானின் கண்கள் என்றும், 'திக்ஷாவிதி என்னும் சைவநூல் கூறுகிறது. இச்சாசக்தி கிரியா சத்தி ஞானாசத்தி என்னும் மூன்று சத்திகளே சிவபெருமானின் மூன்று கண்கள் என்று காரணாகமம்' கூறுகிறது.