உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

7

பழைய காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், விஜய நகர மன்னர்கள் காலம் என்ற விரிவான காலப் பாகுபாட்டில், சிற்பங்கள் உருவாக்கப் பட்டிருப்பதை நாம் அறிவோம். இந்நூலில் காணப்படும் செய்திகள் மேற்குறித்தப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் தொடர்பான விவரங்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

தமிழகச் சிற்ப வரலாறு; அவை உருவாக்கப்பட்ட காலம், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், சிற்ப உருவங்கள் கூறும் விளக்கங்கள் ஆகிய பிற அடிப்படையில் எழுதும் அவசியம் உண்டு. சமய மரபுக் கண்ணோட்டமின்றி, கலைமரபுக் கண்ணோட்டத்தில் இவ்வகையான வரலாறுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. அவ்வகையான வரலாறு எழுதும் போது இந்நூல் அடிப்படையான ஆவணமாக அமையும்.

கட்டிடடக்கலை வரலாறு, சிற்ப வரலாறு ஆகியவை தம்முள் ஒன்றோடு ஒன்று இணைந்தே அமைந்திருப்பதாகக் கூறலாம். திராவிடக் கட்டிடக்கலை வரலாற்றில் இத்தன்மை ஆழமாகச் செயல்படுவதைக் காண்கிறோம். இப்பின்புலத்தில் கலை வரலாற்று மாணவர்களுக்கு இந்நூல் அறிய கையேடாக அமைய வாய்ப்புண்டு. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு, தமிழர் கட்டிடடக் கலை மற்றும் சிற்பக்கலை வரலாற்றை விரிவாக கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளது.

இவ்வகையான ஆய்வுகள் தமிழில் மிகவும் குறைவு. இதில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் இடம் தனித்தே இருப்பதைக் காண்கிறோம்.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை 96. வீ. அரசு

ஏப்ரல் 2010

தமிழ்ப்பேராசிரியர் தமிழ் இலக்கியதுறை சென்னைப் பல்கலைக்கழகம்