உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 105

“செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்டு அவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக் கால்பெரு திடிப்பினுங் கதழுறை கடுகினும் உருமுடன் நெறியினும் ஊறுபல தோன்றினும் பெருநிலங் கிளரினுந் திருநல வுருவின் மாயா வியற்கைப் பாவை

99

என்று கூறுகிறார் பரணர். (நற்றிணை, 201).

“உ

உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின் அகலிலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து பறவை யிழைத்த பலகண் இறாஅல்

தேனுடை நெடுவரைத் தெய்வம் எழுதிய வினைமாண் பாவை

என்பது நற்றிணைச் (185) செய்யுள்.

"பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்ந்த புதிதியல் பாவை

விரிகதிர் இளவெயில் தோன்றி யன்ன...

என்பது நற்றிணைச் (192) செய்யுள்.

கொல்லி மலையில் இருந்த இந்தப் பாவை, உருவெளித் தோற்றம் ஆகும். அதாவது, உள்ளதுபோலக் காணப்படுகிற ஒரு பொய்த்தோற்றம். இதைச் சிற்பக்கலைஞன் கற்பாறையில் பெண் உருவமாக அமைத்து வைக்க வில்லை. குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து பார்க்கும்போது, மலையினிடையே பாறைக் கல்லில் எழில்மிக்க பெண் ஒருத்தி நிற்பதுபோன்றுதோற்றம் காணப்படும். அந்த உருவம் கண்ணையும் கருத்தையுங் கவரும் வனப்புடையது. ஆனால், அருகில் சென்று பார்த்தால் அது மறைந்துவிடும். குறிப்பிட்ட அந்த இடத்துக்கு வந்து பார்த்தால் அவ்வுருவம் மீண்டும் தோன்றும். மலைப் பாறையின் அமைப்புக்களும் சூரியவெளிச்சத்தின் சாயலும் சேர்ந்து, பெண் மகளின் உருவம்போல் அமைந்து காணப்பட்ட இது, வெறும் உருவெளித் தோற்றமே. அழகும், எழிலும், சாயலும் அமைந்த நடுத்தர வயதுள்ள பெண்மணி போன்று காட்சியளித்த இவ்வுருவெளித் தோற்றத்தைச் சங்கப் புலவர்கள் தெய்வப் பாவை என்று கூறியதில் வியப்பொன்றும் இல்லை.