உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

உதயண

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

மன்னன் பள்ளியறையுள் இருந்தபோது. அவ்வறையின் சுவர்களில் ஓவியக் கலைஞர் எழுதியிருந்த பூங்கொடி மான் மறி முதலிய ஓவியங்களைக் கண்டு வியந்தான் என்று கூறுகிறார்.

66

'வித்தகர் எழுதிய சித்திரக் கொடியின்

மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக் கொடியின் வகையுங் கொடுத்தாள் மறியும் வடிவமை பார்வை வகுத்த வண்ணமும்

திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின் மெய்பெறு விசேடம் வியந்தனன் இருப்ப

சிந்தாமணி காவியத்தை இயற்றிய திருத்தக்க தேவர், சோழ அரசர் பரம்பரையில் வந்தவர். அரச பரம்பரையில் வந்தவராதலின், அரண்மனைச் சுவர்களில் எழுதப்பட்டிருந்த சித்திரங்களைப் பற்றியும் சித்திரக் கலையைப்பற்றியும் நன்கறிந்திருந்தார். ஆகவே, இவர் தமது காவியத்தில் ஓவியங்களைப் பற்றிச் சில இடங்களில் கூறுகிறார்.

மங்கையரின் அழகான உருவ அமைப்பைக் கூறும் போது, ஓவியக் கலைஞர் எழுதிய சித்திரம் போன்று அழகுடைய மங்கையர் என்று கூறுகிறார்:-

“உரைகிழித் துணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார்”

என்றும்,

66

20

'ஓவியர்தம் பாவையினொ டொப்பரிய நங்கை

என்றும்,21

"உயிர்பெற எழுதப்பட்ட ஓவியப் பாவை

யொப்பாள்.

என்றும்22 கூறுகிறார்.

அநங்கமாவீணை என்னும் இயக்கி, சீவகனை மயக்குவதற் காக அவனை நோக்கினாள். அப்போது அவளுடைய அழகு, படத்தில் எழுதப்பட்ட பெண் உருவம் போன்று அழகாகக் காணப்பட்டதாம்:- "வடுப்பிள வனைய கண்ணாள்

வல்லவன் எழுதப்பட்ட