உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் -அணிகலன்கள்

125

நமது நாட்டிலே இப்போதுள்ள சுவர் சித்திரங்கள் மிகச் சிலவே. ஏனென்றால். கி.பி. 600 க்கு முன்னர் இருந்த கோயில் கட்டிடங்கள் எல்லாம் செங்கல் சுண்ணாம்புகளினால் கட்டப்பட்டவை. ஆகவே அக்கட்டிடங்கள் விரைவில் அழிந்து விட்டன. அக்கட்டிடங்களோடு சுவர் சித்திரங்களும் அழிந்து விட்டன. கி.பி. 600-க்குப் பின் உண்டான குகைக் கோயில்கள், கற்றளிகள் என்னும் கட்டிடங்களில் எழுதப்பட்ட ஓவியங்களில் பெரும்பான்மையும் இப்போது அழிந்து விட்டன. ஏனென்றால், நுண்கலைகளில் மிக எளிதாகவும் விரைவாகவும் அழிந்து விடக்கூடியது ஓவியக்கலை. ஆகவே அவை, பராமரிப்புக் குறைவு காரணமாகவும் காலப் பழைமை காரணமாகவும் அழிந்து விட்டன.

தமிழ் நாட்டிலே இப்போதுள்ள மிகப் பழைய ஓவியம் சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியமே. அதற்கடுத்த படியாக உள்ளவை காஞ்சி கயிலாசநாதர் கோயில் மதில் ஓவியங்கள். அதற்குப் பிற்பட்டவை தஞ்சாவூர் பெரிய கோவில் ஓவியங்கள் முதலியவை. இவற்றை ஒவ்வொன்றாக விளக்குவோம்.

சித்தன்னவாசல் ஓவியம்

28

அன்னவாசல் என்னும் பெயருள்ள ஊர்கள் புதுக் கோட்டையில் சில உள்ளன. அப்பெயருள்ள ஊர்களில் சித்தன்னவாசல் என்பதும் ஒன்று. இது புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்துமைலுக்கப்பால் இருக்கிறது. இக்கிராமத்துக்கு அருகிலே மலையின்மேலே சிறு குகைக்கோயில் ஒன்று உண்டு. இது ஜைன சமயக்கோயில். இக் கோயிலை அமைத்தவன் பல்லவ அரசனாகிய முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி. 600-630) ஆவன் இந்த அரசன் இசைக்கலை நாடகக் கலை சிற்பக்கலை முதலிய கலைகளில் வல்லவன். அன்றியும் சித்திரக் கலையிலும் வல்லவன். இதனால் அவனுக்குச் சேதகாரி, சங்கீர்ணஜாதி, சித்திரக்காரப்புலி முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு. இந்த அரசன், தக்ஷிண சித்திரம் என்னும் பழைய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் என்று இவன் அமைத்த மாமண்டூர் குகைக்கோயில் சாசனம் கூறுகிறது என்பர்.

இவன் உண்டாக்கிய சித்தன்னவாசல் குகைக்கோயிலிலே இவன் காலத்தில் எழுதப்பட்ட சுவர் ஓவியங்கள் சில காணப்படுகின்றன. இவ்வோவியங்கள், காலப்பழைமையிலும், மாட்டுக்காரப் பயல்களின் அட்டூழியத்தினாலும், இங்குவந்து தங்கியிருந்த மனிதர்களின்