உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை - ஓவியம் ஓவியம் - அணிகலன்கள் 129

நாயக்கர் காலத்து ஓவியம்

தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் அரசாண்ட நாயக்கர் மன்னர்களும் சுவர் ஓவியங்களை அமைத்திருக்கிறார்கள். தஞ்சை நாயக்க அரசர், தஞ்சைப் பெரிய கோயிலில் அமைத்த ஓவியங் களை மேலே குறிப்பிட்டோம். மதுரை நாயக்கர் ஓவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதலிய இடங்களில் இருக்கின்றன.

பழைய கோயில்களிலே இன்றும் சில ஓவியங்கள் மறைந்து ள்ளன. அவை முற்காலத்து ஓவியங்களும் பிற்காலத்து ஓவியங்க ளுமாக இருக்கும். இவற்றையெல்லாம் கண்டு பிடித்துப் பாதுகாக்க வேண்டும். பழைய பல்லவர் காலத்துக் கோயில்கள் சிலவற்றில் இடைக்காலத்து ஓவியங்களும் பிற்காலத்து ஓவியங்களும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். பிற்காலத்து ஓ வியங்களாக

இருந்தாலும் அவற்றையும் பாதுகாக்க வேண்டும்.

1. மதுரைக் காஞ்சி 484 - 5.

3. பரிபாடல் 19: 48-53.

அடிக்குறிப்புகள்

2. பரிபாடல் 18: 27-29.

4. S.I.I. Vol. XIII. Nos. 162, 138, 139.

5. திருக்கழுமல மும்மணிக்கோவை 10. 6. மணிமேகலை; மலர்வளம்புக்க காதை. 7. கடலாடு 169. 8. மதுரைக் காஞ்சி, 516-518.

9. ஊர் அலர்; 31-32.

10. சிலம்பு, வேனிற்காதை, 23-26-ஆம் அடிகளின் உரை.

11. மணிமேகலை; ஆதிரை, 130-131. 12. சிறைக்கோட்டம்.88.

13. துகிலிகை - Brush 14. மணிமேகலை: பளிக்கறை 55-58. 15. நற்றினை. 118. 16.நற்றினை. 146. 17. உஞ்சைக் காண்டம்: நருமதை சம்பந்தம் 45-48.

18. இலாவாண காண்டம், நகர்வலங் கொண்டது. 40-44.

19. மகத காண்டம்: நலனாராய்ச்சி. 97-102.

21. சுரமஞ்சரியார் 23. 22. சருமஞ்சரி 55.

20. காந்தருவ தத்தையார் 210.

23. கனகமாலையார் 17. 24. முத்தி இலம்பகம் 5. 25.குணமாலையார் 259. 26. கேமசரியார் 28. 27. குணமாலையார்155.

28. இவ்வரசன் வரலாற்றைப் பற்றியும் சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றியும் இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகேந்திரவர்மன் என்னும் நூலில் காண்க.

29. Outline drawing.