உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 143

மலைப்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோயில்களின் பாறைச் சுவர்களின்மேல் சுவர் ஓவியங்கள் எழுதப் பட்டன. பாறைச்சுவர்கள் கரடுமுரடாக இருந்தபடியால் அந்தச் சுவர்களின்மேல் மெல்லிய சுண்ணம் பூசப்பட்டது. உமி, சாணம், களிமண் முதலான பொருள்களைக் கலந்து பதப்படுத்தி அமைக்கப் பட்ட சுதையைப் பாறைச் சுவர்களின்மேல் மெல்லியதாகப் பூசினார்கள். அப்போது ஓவியம் வரையத் தக்க சுவர்களாக அவை அமைந்தன. அந்தச் சுவர்களின் மேலே துகிலிகையினால் வரைகோடு களினால் புனையா ஓவியம் வரைந்தார்கள். பிறகு புனையா ஓவியங்களில் வண்ணங்களைக்கொண்டு ஓவியம் அமைத்தார்கள்.

குகைச்சுவர் ஓவியங்களில் புகழ்பெற்றவை அஜந்தா குகைச் சுவர் ஓவியங்கள். நமது பாரத தேசத்தின் மகாராட்டிர மாநிலத்தில் அழகான ஆற்றங்கரை மேல் அஜந்தா மலைகள் இருக்கின்றன. இயற்கையழகு வாய்ந்த வாய்ந்த சூழ்நிலையில் அஜந்தா மலைகள் ருக்கின்றன. இந்தப் பெரு மலைப்பாறைகளைக் குடைந்து பெரிய பெரிய குகைகளாக குகைகளாக அமைத்திருக்கிறார்கள். இந்தக் குகைக் கோவில்கள் சிலவற்றில் சுவர் ஓவியங்கள் எழுதப் பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கிற முறையில் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. பல நூற்றாண்டு களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தச் சுவர் ஓவியங்கள் பாரதநாட்டுக் கலைச் செல்வங்களில் பெயர் பெற்றவை. காடுகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த இந்தக் குகைகள், சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே கண்டுபிடிக்க பட்டன. இப்போது இக்குகைகள் உலகப் புகழ் பெற்ற கலைச் செல்வங்களாக விளங்குகின்றன.

ம்

அஜந்தா குகைச்சுவர் ஓவியங்களில் பல அழிக்கப்பட்டு மறைந்துபோயின. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர் ஒருவர் இந்தச் சுவர் ஓவியங்களில் சிலவற்றைப் படைபடையாகப் பெயர்த்து எடுத்து அதைத் தம்முடைய ஊருக்குக் கொண்டுபோக முயன்றாராம். வழியிலே விபத்து ஏற்பட்டு அந்த ஓவியங்கள் அழிந்துவிட்டனவாம். சில ஓவியங்கள் அழிக்கப்பட்டு மறைந்து விட்டன. எஞ்சியுள்ளவை இப்போது அழகாகக் காட்சியளிக்க கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கிறித்து சகாப்த தொடக்கத்தில் இந்த ஓவியங்களைப் பௌத்தமதப் பிக்குகள் எழுதினார்கள். ஆகவே அஜந்தா குகை ஓவியங்களிலே பௌத்தமதத் தொடர்பான காட்சி