உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

கேழ்கிளர் தொய்யகம் வாண்முகப் புல்லகம்

சூளா மணியொடு பொன்னரி மாலையும்

தாழ்தரு கோதையுத் தாங்கி முடிமிசை

யாழின் கிளவி யரம்பையர் ஒத்தாள்.

கோவலனின் காதற் கிழத்தியாகிய மாதவி எவ்வாறு தன்னை அணிசெய்துகொண்டாள் என்பதைச் சிலப்பதிகாரம் (கடலாடு காதை)

கூறுகிறது:

66

'அலத்தகம் ஊட்டிய அஞ்செஞ் சீறடி

நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப் பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் காலுக் கமைவுற அணிந்து குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை பரியகம் வால்விளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற வணிந்து வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி

காந்தள் நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை அங்கழுத் தகவயின் ஆரமோ டணிந்து

கயிற்கடை யொழுகிய காமர் தூமணி

செயத்தகு கோவையிற் சிறுபுறம் மறைத்தாங்கு இந்திர நீலத் திடையிடை திரண்ட

சந்திரபாணி தகைபெறு கடிப்பிணை அங்காது அகவயின் அழகுற அணிந்து தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து

و